நான்காவது வி ரா ட ப ரு வ ம் விராடபர்வம்என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது. விராடனது சம்பந்தமான பருவ மென்று ஆறாம்வேற்றுமைத்தொகையாகக் கொள்க. விராடராஜனதுநாடாகிய மச்சதேசத்தின் இராசதானியிலே அவ்விராடராஜனைச்சார்ந்து பாண்டவர்கள் அஜ்ஞாதவாசஞ்செய்த வரலாற்றைக் கூறுகின்ற பாகம், இது. பர்வம் - கணு: கரும்பு மூங்கில் முதலியவற்றிற்கு ஏகதேசமாகிய [ஏகதேசம் - ஒருபகுதி] கணுப் போல நூலுக்கு ஏகதேசமாகிய உறுப்பைப் பருவமென்பது, உவமவாகுபெயர். "இணைந்தியல் காலை" [நன் - பத - 22.] என்ற சூத்திரவிதியால், பர்வம் - பருவம் என வகரத்திற்கு முன் உகரம் வந்தது. இப்பருவம்- நாடுகரந்துறைசருக்கம், மற்போர்ச்சருக்கம், கீசகன்வதைச் சருக்கம், நிரைமீட்சிச்சருக்கம், வெளிப்பாட்டுச் சருக்கம் என்ற ஐந்து சருக்கங்கள் அடங்கியது. அவற்றில், முதலாவது நா டு க ர ந் து றை ச ரு க்க ம். (பாண்டவர்விராடனுடைய மச்ச) நாட்டிலே (தம்முருவம்) மறைந்து உறைதலைப்பற்றிக் கூறுஞ் சருக்க மென்க. 1. கடவுள் வாழ்த்து. அங்கையி னேமி சங்குவா டண்டோடடற்சரா சனந்தரித் தருள்வோன், சங்கையின் மறைக ளாயிரங் களுக்குஞ் சாற்றுதற் கரியதத் துவத்தோன், கங்கையி னறலும் காளியன் முடியுங்காளிந்திக் கரையுமே கமழும், பங்கயமலர்க ளிரவுநன் பகலும் பணிந்துபாடுதுமவன் புகழே. |
(இதன்பொருள்.)அம் கையில் - (தம்முடைய) அழகிய கைகளிலே, நேமி- சக்கரத்தையும், சங்கு - சங்கத்தையும், வாள் - வாட்படையையும், தண்டோடு- தண்டாயுதத்தையும், அடல் - வலிமை பொருந்திய, சராசனம் - வில்லையும்,தரித்தருள்வோன் - பூண்டிருப்பவனும்,- சங்கை இல் - கணக்கு இல்லாத,மறைகள் ஆயிரங்களுக்குஉம் - மிகப்பலவான வேதங்களுக்கும், சாற்றுதற்குஅரிய - சொல்லுதற்குமுடியாத, தத்துவத்தோன் - உண்மைப் பொருளாயிருப்பவனுமான திருமாலினுடைய, கங்கையின் அறல்உம் - கங்காநதியின் நீரும், காளியன் முடிஉம் - காளியனென்றநாகத்தின் சிரசும், |