Primary tabs
வியாசபாரதத்துக்கும் உள்ள சிறுசிறு வேறுபாடுகள் உரையினுள் ஆங்காங்குக் காட்டப்படும்.
இந்த உரையிலுள்ள குற்றங்குறைகளைக் கண்டறியும் பெரியோர் தமது இயற்கை நற்குணத்தாற் பொறுப்பதன்றி எனக்கும் அறிவுறுத்துவராயின்,அப்பிழைகளைத் திருத்திக்கொண்டு சமயம் வாய்க்கும்போது பலர்க்கும் அறிவிப்பேன்.
இந்தவிராடபருவத்தில் நிரைமீட்சிச்சருக்கத்துக்கு என்னாசிரியன்மார் கண்ட உரை முன்னமே என்னால் அச்சிடப்பட்டு உள்ளதனால்,மற்றைப்பகுதிகளே உரையெழுதி முதற்பதிப்பில் அச்சிடப்பட்டன: இந்தப்பணியை நான் செய்யுமிடத்துஉடனிருந்து உதவியவர், யான் அச்சிட்ட வேறுபருவங்கட்கு உடனிருந்து உதவியவரான கொ. ஜகந்நாதாசார்யர், M.A. என்பவர் ஆவர்: அன்னார்க்குத்திருமகள் கொழுநன் பலநலங்களையும் பல்குவிப்பானாக: இந்த இரண்டாம் பதிப்பு, விசேடமான மாறுபடுதலில்லாமல் அச்சிடப்பட்டது.
வில்லிபாரதம் முழுவதுக்கும் உரைகண்டு வெளியிடுதலாகிய இந்தப்பணியில் சிற்றறிவினனான எனக்குத்தோன்றாத்துணையாய் நின்றுஉதவி இடையூறின்றி இனிது முற்றுப்பெறத் திருவருள் புரிந்த திருமாலின் திருவடிகளைத் திரிகரணங்களாலும் எஞ்ஞான்றும் போற்றுவேன்.
மன்மதவருடம்
ஐப்பசிமாதம் 12தேதி
இங்ஙனம்
வை. மு .கோபாலகிருஷ்ணமாசார்யன்.
மூன்றாம் பதிப்பு
சார்வரிவருடம்
ஆனி மாதம்
இங்ஙனம்,
வை. மு. நரசிம்மன்.