தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

எங்களைப்-பற்றி


அறிமுகமும் அமைப்பும்
 

       உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

த.இ.க. பணித்திட்டங்கள்

த.இ.க. வின் பணித்திட்டம் பல்வகைப்பட்டவை. இணையவழிக் கல்வித்திட்டங்கள், மின் நூலகம், கணித்தமிழ் வளர்ச்சி, பலவற்றைக் கொண்டுள்ளது.

நோக்கம்

உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.

குறிக்கோள்
  • கணினித் தமிழுக்கான தீர்வுகளை உருவாக்குதல்.
  • உலகளாவிய தமிழ்ச் சமுதாயத்தினர்க்கும், தமிழியலில் ஈடுபாடுள்ள மற்றையோர்க்கும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்தல்.
  • பார் தழுவி வாழும் தமிழர்கட்கு, அவர்கள் தேவைக்கேற்பப் பாடத் திட்டங்களை உருவாக்கி அளித்தல்: அவர்கள் தங்கள் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல்.
  • உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களைத் தொகுத்து, அவற்றைப் பரவலாகத் தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்
  • தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:
  • கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய நியமங்களை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்பத் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தலைவர்

தலைவர், தமிழ் இணையக் கல்விக்கழகம்

அரசு முதன்மைச் செயலாளர்

தகவல் தொழில் நுட்பவியல் துறை, தமிழ்நாடு அரசு.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர்

திரு. துரை. இரவிச்சந்திரன், இ.ஆ.ப.

இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 30-10-2017 12:15:40(இந்திய நேரம்)