பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 102
102

2. பெயரெச்சமும் வினையெச்சமும் பால் எண் காட்டும்.

 
எ-டு: பெயரெச்சம் :
அச்சா லட்கா
:
நல்ல பையன்  
 
அச்சீ லட்கீ
: நல்ல பெண்பிள்ளை
அச்சே லட்கே : நல்ல பையன்கள்.

 
வினையெச்சம் :
கயா ஹை
:
போயிருக்கிறான்.  
 
கயீ ஹை
: போயிருக்கிறாள்.
கயே ஹைன் : போயிருக்கிறார்கள்.

3. ''வஹ்'' என்னுஞ் சொல் ஒன்றே அவன், அவள், அது என்னும் மூன்று ஒருமைப்பாற் சுட்டுகளையும், வே என்னுஞ் சொல் ஒன்றே அவர்கள், அவை என்னும் இரு பன்மைப்பாற் சுட்டுகளையுங் குறிக்கும்.

4. இறந்த கால வினைகளுள்,

செயப்படுபொருள் குன்றிய வினையானால் தமிழிற்போல் பால் எண்களில் எழுவாயைத் தழுவும்.

செயப்படுபொருள் குன்றா வினையானால் எழுவாயைத் தழுவாது செயப்படுபொருளைத் தழுவும். எழுவாய் ''னே'' விகுதி பெறும்.

 
எ-டு:
மைனே ஏக் கோடா தேக்கா = நான் ஓர் ஆண் குதிரையைப் பார்த்தேன்.
   
 
மைனே தஸ் கோடே தேக்கேன் = நான் பத்து ஆண் குதிரைகளைப் பார்த்தேன்.
 

இனி, செயப்படுபொருள் தொக்கு நின்றாலும், ''கி'' என்ற வேற்றுமை யுருபைக் கொண்டிருந்தாலும், இறந்தகால வினை (எழுவாய் எந்தப் பாலிடமானாலும்) எப்போதும் ஆண்பாற் படர்க்கை ஒருமையாகவே யிருக்கும்.

 
எ-டு:
ஸீத்தானே தேக்கா = சீதை பார்த்தாள்.
   
 
ஹம்னே உஸ் ஸ்த்ரீகோ தேக்கா = நாங்கள் அப் பெண்ணைப் பார்த்தோம்.
 

5. ஆறாம் வேற்றுமை யுருபாகிய ''கா'' என்பது பின்னால் வரும் பெயர்ச்சொல் ஆண்பாலாயிருந்து வேற்றுமையுருபு கொண்டிருந்தால் ''கே'' என மாறும்.

எ-டு: ராம் கே கர் மே

இம் மாதிரியே பின்னால் வேற்றுமையுருபுடன் வரும் ஆண்பாற் பெயர்ச்சொல்லின் ஈற்றிலுள்ள ''ஆ'' வும், அப் பெயரைத் தழுவும் உரிச்சொல்லின் ஈற்றிலுள்ள ''ஆ'' வும் ''ஏ'' என மாறும்.

எ-டு: ராம் கே படே கோடே பர்.

இன்னுஞ் சில மயக்கங்களுமுள.

இதுகாறுங் கூறியவற்றைத் தமிழ்மக்கள் செவ்வனே ஆராய்ந்து, எரி மடுப்பினும் இடம் பெயராத மாசுணம்போல் மந்தமாயிராது இனிமேலாயினும் புத்துயிர் பெற்றெழுந்து தம் தாய்மொழிக்குச் செய்ய வேண்டிய பணியை யறிந்து கடைப்பிடிப்பாராக.

- செந்தமிழ்ச்செல்வி

•••••