பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 39
39

பழம்'' என்பது வழக்கு. பேசும் இயல்பு கிளிக்கில்லை. சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் இயல்பே அதற்குண்டு. "சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை" என்பது பழமொழி. சொன்னதைச் சொல்லும் திறத்தில், கிளியினுஞ் சிறந்தது பூவையென அறிக.

 
(4) அச்சன் :
அத்தன் - அச்சன் (ஆண்பால்) தந்தை.
 
அத்தி - அச்சி (பெண்பால்) தாய், அக்கை.
இவை தூய தமிழ்ச் சொற்கள். த - ச : போலி.
ஒ.நோ : பித்தன் - பிச்சன்.

அத்தன், அச்சன் என்பன முறைப்பெயர்.

ஆரியன் என்பது ஒரு மக்களினப் பெயர்; அத்துடன் ஓர் ஆரியச் சொல்.

அத்தன், அச்சன் என்பனவும் அத்தி அச்சி என்பனவும் முறையே ஆண்பாலீறாகவும் எண்ணிறந்த தமிழ்ப் பெயர்களில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றன.

எ-டு : தட்டாத்தி, வண்ணாத்தி

  கிள்ளிச்சி, வேட்டுவச்சி பெண்பால்

அரசன் என்னும் சொல்லே வடநாட்டில் அஜ்ஜ என்னும் பிராகிருதச் சொல்லாக வருகின்றதென்க.

 
(1) பலமொழிகள் தம்முள் தொடர்பு கொண்டிருப்பதால் சொல்லாராய்ச்சிக்கு
   மொழியாராய்ச்சியும் வேண்டும்.

(2) சொற்கள் குடும்பம் குடும்பமாய் இயல்வதால், அவற்றைத் தொகுத்து நோக்கியே
   மூலங்காணுதல் வேண்டும்; என்னும் இரு நெறிமுறைகளை யுணர்த்துதற்கு, ஒரு
   சொற்றொகுதியை ஈண்டெடுத்துக் காட்டுவாம்.

மேலையாரிய மொழிகளிலுள்ள தமிழ்ச் சொற்களுள் ஒரு சில :

குலவு - L. curvo, to bend, E. curve

குரங்கு (வளைவு, கொக்கி) குறங்கு (கொக்கி) D. kring, krink, a curl bend, crook

E. crank to bend, wind and turn

E. cringe A.S. Cringan, Crincan to bend with servility.

கறங்கு (வளைவு, வட்டம்,காற்றாடி, சுழல்) - A.S. hring O.H.G. hing Icel, hringr, G. ring, D. king, Sw. ring, E ring.

SW. kring, about, around; Icel, kringer, a circle,

Prov G. krink, kring, a ring, circle.