பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 38
38

(3) அறிவாகுலச் சொல்லியல் (Pedantic Etymology)

எ-டு : கிளி = கிளைப்பது (பேசும் பறவை)

  மண் = மணப்பது (நாற்றமுடையது)

(4) அடிப்பட்ட சொல்லியல் (Popular Etymology).

எ-டு : நூல் (புத்தகம்) = இழைநூலும் எற்றுநூலும் போல்வது.

(5) குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology)

எ-டு : ஐயன் < ஆரியன் (ஆர்ய)

  அச்சன் < அஜ்ஜ (பிராகிருதம்) < ஆர்ய

  வெறுக்கை (செல்வம்) = வெறுக்கப்படுவது .

(6) வழூஉப் பகுப்புச் சொல்லியல் (Malanalytic Etymology)

எ-டு : சாப்பாடு - சாவதற்கு ஏதுவானது (சா + பாடு)

(7) நகையாட்டுச் சொல்லியல். (Playful Etymology)

எ-டு : தோசை இருமுறை ''சை'' என்று ஒலிப்பது தோ (உருது) = இரண்டு.

இங்கு காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளையெல்லாம் மறுக்கவும் விளக்கவும் புகின் விரியுமாதலின் அவற்றுள் நான்கை மட்டும் ஈண்டாராய்ச்சிக் கெடுத்துக்கொள்வல்,

(1) அணில். அணி = வரி, வரிசை,

அணி - அணில் = முதுகில் மூவரிகளை யுடையது.

(2) வேந்தன் : வேய்தல் = மேலணிதல், முடிசூடுதல். வேய் = வேய்ந்தோன் - வேந்தன் = முடியணியும் உரிமையுள்ள சேர, சோழ, பாண்டியருள் ஒருவன். வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் நால்வகையரசர் பெயருள், வேந்தன் என்பது முடியணியும் உரிமையுள்ள மூவேந்தர்க்கே பொதுவாக வுரியதாம். இவ்வுரிமை கிறித்துவுக்கு முற்பட்ட காலமெல்லாம் கையாளப் பெற்று வந்தது.

கொன்றை வேந்தன் (சிவன்) என்பது கொன்றை வேய்ந்தோன் என்றே பொருள்படுதல் காண்க.

வேந்து என்னும் பாலீறில்லாப் பழவடிவமும் வேந்தன் என்று பொருள் படுவதே; செய்து என்னும் வாய்பாட்டு வினை முற்றும் ஆதல் போன்று.

(3) கிளி, கிள்ளை : கிள் - கிள்ளி - கிளி, கிள் - கிள்ளை, கிள்ளுதல் = கூரிய மூக்கால் கொத்துதல். மரங்களிலுள்ள காய்கனிகளைக் கிள்ளி வைப்பது கிளியின் இயல்பு. பழகாத கிளியை ஒருவன் பிடிப்பானாயின்; உடனே அகப்பட்ட உறுப்பைக் காயப்பட வலிதாய்க் கொத்திவிடும். ''கிளி கொத்தின