பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 37
37

பொருட்பின்னொட்டு என்பதால், தொட்டி - தொட்டில், குடி - குடில் முதலியனவும்; அம் ஈறு ஒரு பெருமைப் பொருட் பின்னொட்டு என்பதால், மதி - மதியம் (முழுமதி), நிலை - நிலையம் முதலியனவும்; உகரம் அகரமாகத் திரியும் திரிவு முறையால், குடும்பு - கடும்பு, நுரை - நரை (வெண்மை) முதலியனவும்; உகர ஊகாரம் முறையே இகர ஈகாரமாகத் திரியும் திரிவு முறையால் புரண்டை - பிரண்டை, தூண்டு - தீண்டு முதலியனவும்; விளங்குதல் காண்க.

செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகளும் (Principles of Etymology) சொற்றிரிவு முறைகளும் (Modes of Derivation) எத்துணையோ பல. அவையும் அவற்றின் வகைகளும் எனது ''சொல்லாக்க நெறிமுறைகள்'' என்னும் நூலிற் கூறப்பெறும்.

சொல்லாராய்ச்சி செய்வார் மேற்கூறியவாறெல்லாம் கற்றிருப்பதுடன் இறைவனால் இதற்கென அழைப்பும் (call) பெற்றிருத்தல் வேண்டும். அல்லாக்கால் உழைப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராய்விடும். தமிழ்ச் சொல்லாராய்ச்சித் துறையில் தலைமையான அழைப்புப் பெற்றவர் கால்டுவெல் கண்காணியாராவர்.

இக் காலத்தில் சிலர், மொழியாராய்ச்சி செய்யாதும் மொழியாராய்ச்சிக்கும் சொல்லாராய்ச்சிக்கும் வேறுபாடு தெரியாதும், சொல்லியல் நெறிமுறைகளையும், சொற்றிரிவுமுறைகளையும் அறியாதும், தாம் தலைமைப் பதவி பெற்றிருப்பது காரணமாகத் தருக்கி, எல்லாம் வல்ல சித்தரும் அனைத்து நூலுங் கற்ற அறிஞரும்போல் நடித்து பொய்யும் வழுவும் மலியச் சில சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் வரைந்திருப்பதுடன், கால்டுவெல் ஐயர்காட்டிய வழி நின்று உண்மையான ஆராய்ச்சி செய்த பிறரை, நெறிப்பட ஆராயாதவர் என்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கூறியும் வருகின்றனர். எளிய சொற்கட்கு எவரும் வேர்ச்சொல் காட்டுவர். அரிய சொற்கட்குக் காட்டுவதே அரிது. சொல்லியல் நெறிமுறைகளை அறியாதார் கூறும் போலிச் சொல்லியல், பின்வருமாறு எழுதிறப்படும்.

(1) ஒலிமுறைச் சொல்லியல் (Sound Etymology)

 
எ-டு :
பாராளுமன்று - Parliament. பாராளுமன்று என்பது
 
பார் ஆளும் மன்று என்னும முச்சொற்றொடர். Parliament என்பது parler (speak) என்னும் பிரெஞ்சுச் சொல்லும் (ment)என்னும் ஆங்கில விகுதியும் சேர்ந்த ஒரே சொல்

(2) உன்னிப்புச் சொல்லியல் (Guessing Etymology)

எ-டு :     அணில் = அழகு (அழகிய வரிகள்) உடையது.

அணி = அழகு கலம் = கல்லாற் செய்யப்பட்டது, வேந்தன் = வெம்மையாய் அதிகாரஞ்

செலுத்துபவன். வேம் = வேந்தன்.