தமிழிலுள்ள இளமைப்பெயர்களுள் பார்ப்பு என்பது ஒன்றாகும்.
|
மாற்றருஞ்
சிறப்பின் மரபியல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று)
ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே,
|
|
(1)
|
|
அவற்றுள்,
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை,
|
(4)
|
|
தவழ்பவை
தாமும் அவற்றோ ரன்ன,
|
(5)
|
என்பன தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள்.
பறவைக் குஞ்சும் சில ஊருயிரிகளின் (reptiles)
இளமையும் பார்ப்பெனப்படும் என்பது இவற்றால் தெரியவரும். சில விலங்குகளின் குட்டியும் பார்ப்பெனப்படும்
என்று பிங்கல உரிச்சொற்றொகுதி கூறும். இது அத்துணைச் சிறப்புடைத்தன்று, தாயினால் மிகக்
கவனித்துப் பார்க்கப்படுவதினால், பறவைக் குஞ்சு பார்ப்பு எனப்பட்டது. பார்த்தல் = பேணுதல்,
பேணிவளர்த்தல். பார்ப்பு என்னுஞ் சொல் பொருட்கரணியம் பற்றி, nurs(e)ling
என்று ஆங்கிலச் சொல்லை ஒத்ததாகும். சில ஊருயிரிகளின் இளமைக்கும் பார்ப்பு என்னும் சொல்லைத்
தொல்காப்பியர் மாட்டெறிந்தாரேனும், அது சிறப்பாகப் பறவையின் இளமைக்கே உரியதென்பதை,
''சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்'' என்னும் உத்திபற்றி அதை முதற்கண் தனிப்படக் கூறியதாற்
பெறவைத்தார்.
பார்ப்பு என்னும் சொல் பொருள் விரிபு முறையில் மக்கட்
குழவியையும் குழவி போன்ற பொம்மையையும் குறித்தபோது ரகரங் கெட்டுப் பாப்பு, பாப்பா எனத்
திரிந்தது.
ஒ.நோ: கோர் - கோ, கோர்வை - கோவை.
|
பாப்பா
=
|
1.
பறவைக் குஞ்சு
|
|
|
2.
ஊருயிரி யிளமை
|
|