பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 48
48

 
சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை
(சிறுபஞ்சமூலம். 9)

E. pupa = chrysalis

3. மக்கட் குழவி.

E. baeb, baby.

4. சிறுமி

L. pup = Girl, pupa = girl .

5. விலங்கின் குட்டி,

E. pup, puppy = young dog.

6. பொம்மை.

   L. pupa = doll. of. poupee = doll, plaything, toy;

   F. puppette = doll, dim of pupa (girl).

   E. puppet = small figure representing human being

   E. poppet = small person.

இட்டு என்பது, தமிழில் ஒரு சிறுமைப் பொருள் முன்னொட்டு, இட்டிடை= சிற்றிடை.

இட்டேறி = சிறு வண்டிப்பாதை. இட்டு - OF. ette, E. et,

பாப்பா என்னுஞ் சொல் நாளடைவிற் பாவை என்று திரிந்தது.

தெ. பாப்ப, க. பாப்பெ. ம.பாவ

பாவை = 1. படிமை, பொம்மை

 
மரப்பாவை நாணா லுயிர் மருட்டி யற்று
(குறள். 1020)

 
பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும்
(மணி 1:45)

 

2. அழகிய உருவம்.

சித்திரப் பாவையின் அத்தக வடங்கி
(நன். 40)

 

3. கருவிழியிற் பாவைபோல் தெரியும் உருவம்.

கருமணியிற் பாவாய் நீ போதாய்
(குறள். 1125)

 

4. கருவிழி,
L. pupillus, OF. pupille, E. pupil. dim. of L. pupa.

(குறள். 1125)