பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 64
64

3. மதங்கொள்ளுதல்.

               " மதித்த களிற்றினின்" (கம்பரா. பஞ்சசே. 56)

மதி = மதயானை. "கோண் மதித்திடர் கிடந்தன", (கம்பரா. நாகபாச. 136)

மதி- மதம் = மிகுதி, பெருமை, வலிமை, வளம், செருக்கு, மதநீர்.

மதம் - மதன் = மிகுதி, வலிமை, செருக்கு.

மத்தம் = மதம். மத்தமா = யானை. மத்தம் - மதம் என்றுமாம்.

மத்தன் = கொழுத்தவன். "மத்த னிராவணன் கொதித்தான்" (இராமநா. உயுத். 44).

மத்தம், மத்தன் என்பன மத்த என்று வடமொழியில் திரியும்.

 
மதம்-மதர். மதர்த்தல்=மிகுதல், செழித்தல், கொழுத்தல், மதங்கொள்ளுதல், செருக்குதல்.

 
பல பொருள்கள் அல்லது வழிகள் அல்லது கருத்துக்கள் கலத்தலால், கலக்கமும் மயக்கமும் உண்டாகும்.

மத்தித்தல்=கலத்தல், மருந்து கலத்தல்

மத்தம் = மயக்கம். மத்தம்-மதம்-மதன்=கலக்கம்.

 
ஒ.நோ: :
குல - குலவு - கலவு, கலவுதல் = கலத்தல். குலவுதல் = கூடுதல். குல - கல -
 
கலங்கு - கலக்கு - கலக்கம். முய - முயங்கு -முயக்கம். முயங்குதல = தழுவுதல், கலத்தல். முய - மய - மயங்கு - மயக்கு - மயக்கம் = கூட்டம், கலக்கம். மயத்தல் = மயங்குதல். "மயந்துளேனுலக வாழ்க்கையை" (அருட்பா, அபயத்திறன். 14).

 
மயக்கக் கருத்தினின்று, உணர்வின்மை (மூர்ச்சை), வெறி, கோட்டி (பைத்தியம்), காமம் ஆகிய கருத்துகள் தோன்றும்.

மத்தம் - மத்தன் = மதிமயங்கியவன், கோட்டி பிடித்தவன்.

மத்தம் - மதம் = குடிவெறி, கோட்டி.

மத்து = ஊமத்தை. மதத்தல்=மயங்குதல்.

மத்து, மத்தம், மத்தன் என்னும் இம் முச்சொல்லும் வட மொழியில் மத்த எனத் திரியும்; மத என்பது mada எனத் திரியும்.

செருக்கு, யானை மதம் ஆகிய இரு கருத்தும் மயக்கக் கருத்தினின்று தோன்றியதாகவுங் கொள்ளலாம். ஒ.நோ: களி-களிறு. களித் தல்=கள்ளுண்டு வெறித்தல், மயங்குதல்.

நிலவொளியால் கோட்டி யுண்டாகுமென்று பண்டைக் காலத்தில் கீழ் நாட்டிலும் நாட்டிலும் ஒரு கருத்திருந்ததால், திங்களுக்கு மயக்கந் தருவதுஎன்னும் பொருள்பற்றி ஒரு பெயருண்டாயிற்று.