மதி என்னும் சொல், பருத்தல், கடைதல், கொழுத்தல்,
மதங்கொள்ளுதல், மயக்கம், கள், யானை, நிலா, இனிமை, கருவாப்பட்டை, அளவு, மதிப்பு, அறிவு,
அசைச்சொல் முதலிய பொருள்களில் ஒரு வேர்ப் பல பொருட் சொல்லான தென் சொல்லும்; பெண்பால்
அடை மொழியீறாக வரின், ''மான்'' என்னும் தம் ஈற்றினின்று திரிந்த வட சொல்லும் ஆகும். இவ்
விரண்டிற்கும் எவ்வகைத் தொடர்புமில்லை. இவற்றின் வரலாறு வருமாறு:-
முத்து - மத்து - மத்தி - மதி. உ - அ (அள்ளைத் திரிபு),
முத்துதல் = சேர்தல். (சீவக. 504), முகத்தொடு முகம் சேர்தல்.
பல பொருள்கள் அல்லது கூறுகள் ஒன்றுசேரின் திரட்சியுண்டாகுமாதலால்,
சேர்தற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும்.
"சேரே திரட்சி" (தொல். சொல். 363).
முத்து - முத்தை = திரட்சி (சூடா.), சோற்றுருண்டை.
முத்தை - மொத்தை = பருமன், உருண்டை.
மொத்தை - மோத்தை = பருத்த வெள்ளாட்டுக்கடா.
முத்து - மொத்து - மொத்தம் = திரட்சி, முழுமை.
முத்து = திரண்ட விதை, மணி, கிளிஞ்சிலில் விளையுங் கல்,
கொப்புளம்.
முத்து - முத்தம் = பெரிய முத்து, இச் சொல் வடமொழியில்
முக்த வென்று திரியும். ''அம்'' பெருமைப் பொருள் ஈறு.
முத்து - மத்து = திரண்ட தயிர் முதலியன கடைகருவி. மத்து
- மத்தம் "ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறு" (கலித். 110)
மத்து - மத்தி. மத்தித்தல் = கடைதல்.
மத்தி - மதி. மதித்தல் = கடைதல், விரலால் அல்லது கையால்
நசுக்கிப் பசைபோலாக்குதல்.
மதி - மசி. மசிதல் = பசைபோலாதல் (த. வி.)
மசித்தல் = பசை போலாக்குதல் (பி.வி.)
மத்து, மத்தம் என்பன மந்த (mantha)
என்றும்; மத்தி, மதி என்பன மத் (math)
என்றும், மசி என்பது
மஷ் என்றும், வடமொழியில் திரியும்.
மத்தம் = எருமைக்கடா. இச் சொல் வடமொழியில் மத்த எனத்
திரியும். பொதுவாக, ஓர் இயங்குதிணை உயிரியின் உடம்பு பருத்தலால் கொழுத்தலும் மதங்கொள்ளுதலும்
உண்டாகும்.
|
மதித்தல் =
|
1.
பருத்தல், உப்புதல்.
|
|
|
2. கொழுத்தல், செருக்குதல்.
" மதித்தெதிர் தெவ்வா" (இரகு. மீட்சி. 37).
|
|