1.தமிழ்
மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகள்†
1. 0
முன்னுரை
“பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு” என்பது அறிவியல் அடிப்படையில் முதன்முதலாக
உயிரியல் மாற்றங்களை ஆராய்வதற்கே பயன்படுத்தப்பெற்றது. பின்னர் அக்கோட்பாடு
மானிடவியலின் பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பெற்றது. இந்தியாவைப் பொறுத்தவரையில்
இப்பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ‘பரிணாம வாதம்’ என்ற பெயரில் நெடுங்காலமாகவே வழங்கி
வந்துள்ளது. ஆயினும் மொழி ஆராய்ச்சிக்கு அக்கொள்கை ஒரு போதும் பயன்படுத்தப்
பெறவில்லை. ஏனெனில் உயர்தனிச் செம்மொழி அல்லது சரியான வழக்கு என்பதில் பற்றுக்
கொண்டோர் அதனின்றும் மாறுபட்டவைகளையெல்லாம் பிழையானவை என்றும் இழிந்தவை என்றும்
நம்பியதே இதற்குக் காரணமாகும். மேலும் இலக்கியம், தத்துவம், நியாயசாத்திரம், சமயம்
முதலிய எத்துறையாயினும் அத்துறையின் பிற்கால வழக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களையெல்லாம்
மூல நூல்களின் மீதே ஏற்றிச் சொல்லும் உரை மரபும் காரணமாகும். இவையன்றி என்றும் மாறாத
இளமையுடையதாக, கன்னித்தாயாக, மொழியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியமையும் மொழியை
வரலாற்று முறையில் அணுகுவதற்கு இடையூறாக அமைந்தது. தமிழரும் தம்மொழியைக் ‘கன்னித்தமிழ்’ என்பர்.
எனவே
இழிவழக்குகளின் வரலாறு (History
of Corruption) என்பதினின்றும் வேறுபட்ட தமிழ்மொழி வரலாறு என்பது புதுமையானது; மரபு வழிப்பட்டோரால்
பொதுவாகச் சரியானது என ஒத்துக் கொள்ளப்படாதது, திராவிடமொழிகள்
†
மூல ஆதாரங்கள் (Sources)
|
|