தமிழ் மொழி வரலாறு
100
இடச்சார்பாக மாறும் பிற
ஒலிகள்
இடச்சார்பாக மாறும்
சில ஒலிகள் வினையின் முதலில் வருகின்றன. நாவளை அல்லது நுனியண்ண மூக்கொலியில் முடியும்
பெயர்ச் சொற்களால் தொடரப்படும் பொழுது யகர, ஞகர மெய்கள் மாற்றொலிகளாக உள்ளன.
முதலில் ஞகர மெய் இருந்தது;60பின்னர் அது யகர மெய்யானது. ஞகர மெய்யை உடைய வடிவத்தை யகர மெய்யை உடைய வடிவம்
இப்பொழுது கைப்பற்றி வருகிறது.
வகர மெய்யீற்றை உடைய
வடிவத்தைத் தொடர்ந்து மகர மெய் வருமாயின் மகர மெய் நெடிலாகிறது.
சான்று
‘தெவ் + மாண்ட >
தெம்மாண்ட’.61
இதுவும் ஓரினமாதலுக்குச் சான்றாகும். மகர மெய்யைத் தொடர்ந்து வகர மெய் வருமாயின் மகர
மெய் குறுகுகிறது. வாக்கியத்தின் இறுதியில் வருகையில் ‘போலும்’ என்ற சொல் ‘போன்ம்’
என்றாகிறது. சொல்லிறுதியில் வரும் இம்மயக்கம் அருகியதாகும்.62
பிற சொற்களில் இத்தகைய மெய்ம்மயக்கம் இல்லை. இச்சொல்லில் கூட மகரமெய் தெளிவாக
உச்சரிக்கப்படுவதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
60.
தொல்காப்பியம், 146
|
“ண ன வென் புள்ளிமுன்
யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார்
புலவர்”. |
61.
தொல்காப்பியம், 382 ஆவது நூற்பா, நச்சினார்க்கினியர்
உரை.
62.
தொல்காப்பியம், 51
|
“செய்யுள் இறுதிப்
போலி மொழிவயின்
னகார மகாரம்
ஈரொற்றாகும்”.
|
|
|