பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

102

பிற உருபன்களையும்3 அது குறிப்பதாகவே முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. பின்வரும் வெந்த்ரீஸின் ( Vendryes) கூற்று4 இங்குக் குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு வாக்கியத்திலும் மாறுபட்ட இருவகையான கூறுகள் உள்ளன.

1. கருத்துக்கள் அல்லது எண்ணங்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.
2. அவற்றுக்கிடையேயான சில உறவுகளைக் குறிப்பவை.

உருபன் பொருளன்( Semanteme) ஆகியவற்றுக்கிடையேயான வேற்றுமைக்கு இது இணையானதாகும். கருத்துப் படிவங்களைக் குறிக்கும் மொழியியற் கூறு பொருளனென்றாகும். இவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்டும் கூறு உருபன் எனப்படும். பொருளன்களுக்கிடையேயான உறவு பற்றி மனதில் ஏற்பட்டுள்ள எண்ணங்களை உருபன் வெளிப்படுத்துகிறது. கருத்தின் மெய்யான, புலனால் அறியக்கூடிய கூறு பொருளனென்றாகும். உருபன் என்பது பொதுவாக ஒரு ஒலிக்கூறாகும். (அது தனி ஒலியாகவோ அல்லது தனி அசையாகவோ அல்லது பல அசைகளின் கூட்டாகவோ இருக்கலாம்.) வாக்கியத்தில் உள்ள கருத்துக்களுக்கிடையேயான இலக்கண உறவுகளை அது குறிக்கிறது”.

இவற்றைச் ‘சொல்’ என்றழைப்பதன் மூலமாக, மொழியின் ஒட்டு நிலைத்தன்மையைத் தொல்காப்பியர் வற்புறுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் வேரல்லா உருபன்கள் ஓரசை அல்லது ஈரசைச் சொற்களாக அவரால் தரப்பட்டுள்ளன. அவற்றின் வாய்பாடுகள் வருமாறு :

(மெய்) உயிர் (மெய்) அல்லது (மெய்) உயிர் (மெய்) மெய் உயிர்

இரட்டித்த மெய்களை அவர் சொல்வடிவங்களிலேயே தந்துள்ளார்.

சான்று : த்த்: என்பதை ‘அத்து’5 எனக் கூறுதல்

க்க்: என்பதை ‘அக்கு’6 எனக் கூறுதல்


3. தொல்காப்பியம், 938

“இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே”.

4. J. Vendryes :

Language, London, 1952. pp 73-74.

5. தொல்காப்பியம், 125

“அத்தின் அகரம் அகரமுனை இல்லை”.

6. தொல்காப்பியம், 128

“எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி