|
தமிழ் மொழி வரலாறு
103
சொல்லமைப்பு முறையை
வெளியிடத் தொல்காப்பியர் ஒரு முறையைக் கொண்டுள்ளார். எல்லா வேர்களையும் பொதுவாகக்
குறிக்கச் ‘செய்’ என்னும் வேரை அவர் பயன்படுத்துகிறார். இதனுடன் தேவையான பிற ஒட்டுக்கள்
சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு கிடைக்கும் வடிவங்கள் சொற் கட்டமைப்புக்களைக் குறிக்கும்
வாய்பாடுகளாகின்றன.
சான்று
1. ‘செய்து’
(செய் +
து) - வினையெச்ச வாய்பாடாகும்.
2. ‘செய்த’
(செய்து + அ)
- இறந்தகாலப் பெயரெச்சவாய்பாடாகும்.
3. ‘செய்யும்’
(செய் + ய் +
உம்) - முக்காலத்துக்கும் ஒத்தவற்றைக்குறிக்கும் வாய்பாடாகும்.
தமிழ் ஒட்டுநிலை மொழி
என்பதை இது தெளிவுபடுத்துகிறது. வேர் மொழி முதலில் வருகிறது. பிற்காலத்தவர் வேருக்கு ‘முதல்
நிலை’ எனப்பெயரிட்டு வழங்கினர். ‘இறுதி நிலை’ அல்லது ‘ஈறு’ என்னும் சொல்லும்
தொல்காப்பியத்தில் வருகிறது. சொல்லின் இறுதியில் உள்ள ஒட்டினை இது குறிக்கின்றது.
‘இடைநிலை’ இடையில் உள்ள உருபனைக் குறிக்க வழங்கினும், காலம் காட்டும் இடை நிலைகளையே
சிறப்பாகக் குறிக்கும் வகையில் இது மாறியுள்ளது.
1. 1 வேர் உருபன்கள் (Root
Morphemes)
தொல்காப்பியரின்
கருத்துப்படி உரிச்சொல் என்பது, ‘இசை’ அல்லது ‘பண்பு’ அல்லது ‘குறிப்பு’ என்பதை
உணர்த்தும். ‘ஒரு பொருட் பன்மொழியாகச்’ சில வேர்களும் ‘பல பொருள் ஒரு சொல்லாகச்’
சில வேர்களும் உள்ளன. தொல்காப்பியரின் கருத்துப்படி இவ்வேர்கள் வினையாகவும் வரலாம்;
பெயராகவும் வரலாம்.7
வினையையும் பெயரையும் உருபனியல் நிலையில் வேறுபடுத்தப் பலர் முயன்றாலும் அப்பாகுபாடு
பெரிதும் தொடரியல் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்பதால் மேலே கூறப்பட்டதன்
|