பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

104

அடிப்படை முக்கியத்துவம் தெரியவரும். அவர் சில வேர்களின் பொருளைத் தருகிறார்.8

வேர்களை அவர் தொழிற்பெயர் வடிவத்தில் தருகிறார். உருபுகளை நீக்க, வேர்கள் ஓரசையாகவோ ஈரசையாகவோ இருக்கும்.

அவற்றின் வாய்பாட்டு வடிவங்கள் வருமாறு :

1. ஓரசை வேர்கள் : “[மெய்] நெட்டுயிர் / குற்றுயிர் மெய்”.
2. ஈரசை வேர்கள் : “[மெய்] நெட்டுயிர்/குற்றுயிர்மெய் நெட்டுயிர்/குற்றுயிர் மெய்”.

[இரண்டாவது அசையில் குற்றுயிர் வருமிடங்களே மிகுதி]

1. 2 வேரல்லா உருபன்கள் (Non-root Morphemes)

வேரல்லா உருபன்கள் அல்லது இடைச்சொற்களின் பட்டியலில் பின் வருவன அடங்கும்.9

  1. காலம் காட்டும் இடைநிலைகள்.
2. வேற்றுமை உருபுகள்.
3. உவம உருபுகள்.
4. அசைநிலை.5. இசைநிறை.
6. தத்தம் குறிப்பாற் பொருள் உணர்த்துவன.
7. சாரியை.


8. தொல்காப்பியம், 784 ஆவது நூற்பா முதல் 871 ஆவது நூற்பா முடிய.

9. தொல்காப்பியம், 735

 

“அவைதாம்
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுநவும்
வினைசெயல் மருங்கில் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுநவும்
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய்குநவும் என்று
அப்பண் பினவே நுவலுங் காலை”.