|
தமிழ் மொழி வரலாறு
105
இவற்றுள் முதல் மூன்றும்
விளக்காமலேயே விளங்குவனவாம்.
நான்காவதான
‘அசைநிலைகள்’ என்பவை சொல்லாக்கக் கூறுகளாகவும், பிந்து நிலைகளாகவும் (enclitics) வருவனவாகும். இடப்பெயர்களை எப்பொழுதாவது இவை குறிப்பால் உணர்த்துகின்றன. என்பதைத் தவிர
இவற்றின் பொருள் இழக்கப்பட்டுவிட்டன என்றே கொள்ள வேண்டும். இவை பழங்காலத்தில்
ஒட்டுக்களாக இருந்திருக்க வேண்டும்.
தொல்காப்பியர் தந்துள்ள
அசைநிலைகளின் பட்டியல் பின்வருமாறு:
|
அந்தில் |
752* |
|
|
அரோ |
764 |
|
|
ஆங்க |
762 |
|
|
ஆகல |
765 |
|
|
ஆர் |
755 |
|
|
இக |
759 |
முன்னிலையில் வருகிறது. |
|
இகும் |
759 |
ஏவல் விகுதியாக வருகிறது. |
|
என்பது |
765 |
|
|
ஏ |
742 |
|
|
கா |
764 |
|
|
குரை |
757 |
|
|
சின் |
759 |
|
|
மதி |
759 |
ஏவலில் வருகிறது. |
|
மற்று |
747 |
|
|
மாறு |
764 |
|
|
மா |
758 |
வியங்கோளில் வருகிறது. |
|
மியா |
759 |
முன்னிலை ஏவலில் வருகிறது. |
|
பிற |
764 |
|
|
யா |
764 |
|
|
பிறக்கு |
764 |
|
|
போ |
764 |
|
பின்வரும் அசைநிலைகள்
தொல்காப்பியரால் ஆளப்பட்டுள்ளன:
| |
ஆங்கு 108
ஆர் 371
ஆல் 168
|
|
*
எண்கள்
தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிப்பன.
|
|