பக்கம் எண் :

என
 

தமிழ் மொழி வரலாறு

112

என்னும் பயனிலை, பிற்காலத்தில் - அதாவது தொல்காப்பியர் காலத்தில் - பெயரடை என விளக்கப்பட்டது. இவ்விடத்தில் இது வருவதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ‘செய்யும்’ என்னும் வினைமுற்று நிகழ்காலத்தைக் குறிப்பாகக் குறிக்கிறது. ஆனால் தொல்காப்பியரே குறிப்பிடுவது போல, எக்காலத்திற்கும் பொதுவான உண்மைகளைக் கூறுமிடங்களில் இவ்வினைமுற்று பயன்படுத்தப்படுகிறது.19

சான்று

‘தீச் சுடும்’. பெயரெச்சம் என்ற முறையில் இது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்த்தும். முன்னரே கூறியது போலத் தொல்காப்பியர் காலத்தில் நிகழ்காலம் காட்டும் உருபு எனத் தனியே எதுவும் கிடையாது. உண்மையில் ‘இறந்த காலம்’, ‘இறப்பில்லாக் காலம்’ என இரு வேறுபாடுகளே இருந்தன.

வினையெச்சம்

வினையெச்சங்கள் முக்கியமாக ஒன்பது வாய்பாடுகளில் வருவனவாகும். அவற்றின் இலக்கணப் பொருள்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.20

1.

செய்+து

>

செய்து

2.

செய்+ய்+ஊ

>

செய்யூ

3.

செய்+பு

>

செய்பு

4.

செய்+து+என

>

செய்தென

5.

செய்+இ+அர்

>

செய்யியர்

6.

செய்+இ+அ

>

செய்யிய

7.

செய்+இன்

>

செயின்

8.

செய்+அ

>

செய

9.

செய்+அல்+கு

>

செயற்கு


19. தொல்காப்பியம், 725

 

“முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை
எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து
மெய்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்”.

20. தொல்காப்பியம், 713

 

“செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி”.