பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

113

‘செய்து, செய்யூ, செய்பு’ ஆகிய மூன்று வாய்பாடுகளும் ஒரு பிரிவைச் சேர்ந்தவை. இவ் எச்சங்களின் காலம் அவை சார்ந்து வரும் வினைமுற்றின் காலத்தைப் பொறுத்தது.21 ‘செய்’ என்பது வேராகும். துகரம் இறந்த காலம் காட்டும் இடைநிலையாகும். ‘வெடிப்பொலி + உகரம்’ என்னும் வடிவத்தை இறந்தகால இடைநிலைகள் பெற்றுள்ளதாகப் பழைய இலக்கண ஆசிரியர்கள் பேசுவர். பின்வரும் உருபொலியன் விதியை அவர்கள் தருகின்றனர்:

உ[உயிர்] > - ழூ [உயிர்]

இம்முறையே இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. உயிர்கட்கு இடையில் உள்ள வெடிப்பொலி இழக்கப்படல் என்னும் போக்கு, ‘செய்யூ’ என்னும் வடிவத்திற்கு இடந்தருகிறது. வேரான ‘செய்’ என்பது பழைய ‘செஇ’ என்பதாகும். துகரம் தகரமெய்யை இழந்து உகரமாகிறது. இ+உ > ஊ, தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத் தமிழின் உருபொலியன் விதி ஒன்றின் விளைவே இதுவாகும்,

“குற்றுயிர்1 / நெட்டுயிர்1 + குற்றுயிர் / நெட்டுயிர்2 > குற்றுயிர்2 / நெட்டுயிர்2 உயிர்2 ~ குற்றுயிர் / நெட்டுயிர்2

“செய்யூ” என்பது இறந்தகாலம் காட்டுகிறது; வாக்கியத்தில் ‘செய்து’ என்பதற்கு உள்ளது போன்ற வருகை முறையே இதற்கும் உண்டு. இவற்றின் எழுவாய் வினைமுற்றினுடையதைப் போன்றதே ஆகும். “செய்தென” என்பதில் இரு சொற்கள் உள்ளன. செய்து + என > செய்தென. “செய்து” என்பது பழைய வினைமுற்றாகும். இக்காலவழக்கில் கூட “எனவே” என்பதில் உள்ள “என” என்பது “ஆகையால்” என்னும் பொருளுடையது. ‘செய்தென’ என்பதன் பொருள் “இது செய்யப்பட்டது ஆகையால் . . .” என்பதாகும். “செய்து” என்பது பயனிலையே என்பது மறக்கப்பட்டு விட்டதாலும், இத்தொடர் முழுவதும் ஒரே சொல்லாக வழங்குவதாலும், தொடர்ந்து வரும் வினைச் சொல்லின் அடையாக இது ஆகிவிட்டது. எனவே இது வினையெச்சமாகக் கருதப்படலானது.

இது போன்ற தொகைகள் வேறு சிலவும் உள்ளன. தமிழில் இடத்தைக் குறிக்கும் சொற்கள் காலத்தையும் குறிக்கின்றன.


21. தொல்காப்பியம், 715

 

“அவற்றுள்
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின”.