பக்கம் எண் :

2
 

தமிழ் மொழி வரலாறு

200

2. 2. 3. அ > உ; உ > இ

வந்தது

>

வந்து

இருபது

>

இருப தி

குற்றியலுகரம் இகரமாகிறது. முன்பு குறிப்பிட்டது போல இ > யி என்றாகிறது.

2. 2. 4. ஐ

ஐ > அய் > அ

ஐம்பது

>

அம்பது

தலை

>

தல

யானை

>

யான

ஐ > எய் > எ

பழைய உச்சரிப்பான ‘ஐ > எய் > எ’ என்பதும் தொடர்ந்து வருகிறது.

நைவேத்யா > நெய்வேத்தியம்

‘கைப்போது’ என்பது ‘எப்போது’ என்பதோடு தொடை நயத்தில் வருகிறது. எனவே ‘கைப்போது’ என்பது ‘கெய்ப்போது > கெப்போது’ என உச்சரிக்கப்பட வேண்டும்.

ஏய் + எய் + அய்

எ அல்லது எய் என உச்சரிக்கப்படுவது ஐ என எழுதப்படுவதால் ‘கண்ணிலெயும்’( > கண்ணிலேயும் ) என்பது ‘கண்ணிலையும்’ என எழுதப்படுகிறது. இது போலி நாகரிக ஆக்கமாகும் (Hyper-urbanisation).

அகர எகர மாற்றமானது மொழி முதலில் சமஸ்கிருத ஒலிப்புடை வெடிப்பொலிக்குப் பின்னர் வருவது என்பது முன்னரே விளக்கப்பட்டது. எனவே அச்சூழலில் ஒள > அவு > எவு என்ற மாற்றம் நிகழ்கிறது. கௌதமன் > கவுதமன் > கெவுதமன்.

2. 2. 5. எ > அ

‘ஐ > எ > அ’ என்னும் மாற்றத்துடன் கூட ‘எ > அ’ என்னும் மாற்றம் மொழி முதலிலும் ஏற்படுகிறது.

எல்லாம் > அல்லாம்
வேண்டாம் > வாண்டாம்