பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

199

சான்று :

சிலிர்-க்கு

>

சிலுர்-க்கு

துளிர்

>

துளுரு

குளிர்

>

குளுர் (உ)

தளிர்

>

தளுர் (உ)

தமிழ்

>

தமுழு

மகிழ்

>

மகுழு

மதில்

>

மதுலு

ஆ.

i ) உகரத்தின் மதிப்பு

இவ்விடங்களில் வரும் உகரம் குற்றியலுகரமாக (W)லாம். இவ்வுகரம் குறில் உகரத்திலிருந்து வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படுவதில்லை. இவ்வுயிர் சில இடங்களில் முன் உயிராகச் சற்று முன் தள்ளிக் கீழ் உயிராக ஒலிக்கப்பெறுகிறது. எனவேதான் இது அகரமாக எழுதப்பெறுகிறது.

எதிர் > எதுர் > எதர்

ii ) மொழியிறுதி ‘-று > - ரு > - ர்’ என்பது மேலே கூறப்பட்ட வாய்பாட்டைத் தருமாயின், அங்கும் இம்மாற்றத்தைக் காணலாம்.

வயிறு > வயிரு > வயிர் > வயர்
ஞாயிறு > ஞாயிரு > ஞாயிர் > ஞாயர்

iii ) மொழி இறுதியில் புக்கு > புக்கு0 > புக்கி என்பன உள்ளன.

iv ) மொழி இடையிலும் இது வருகிறது.

‘இருப்பு > இரு0ப்பு > இரிப்பு’ என மலையாளத்தில் வருகிறது. ‘மெய்1 உயிர்1 மெய்2 உயிர்2 வெடிப்பொலி உயிர்3’ என்னும் வாய்பாட்டில், ‘உயிர்3’ என்பது இதழ் விரி உகரமாய் ( குற்றியலுகரம் ) இருக்குமாயின், ‘உயிர்2’ என்பதும் இதழ் விரியாகிறது.

2. 2. 2. அ > இ

தண்டனை > *தண்ட்’னை > தண்டினை
அனைய > அனெய > *அன்’ய > அனிய