பக்கம் எண் :

New Page 6
 

தமிழ் மொழி வரலாறு

198

மொழியமைப்பைக் கொண்டு நாயக்கர் காலத் தமிழின் வளர்ச்சி ஆராயப்பட்டுள்ளது. Êசில குறிப்புக்கள் இங்குத் தரப்பெற்றுள்ளன.

இம் மாற்றங்கள் ஒருசேர நிகழாது இங்கொன்றும், அங்கொன்றுமாக நிகழ்ந்தனவெனினும் அவை பிந்தைய வளர்ச்சிகளைத் தெளிவுபடுத்தலாமாதலால் இங்குக் குறிக்கப்பட்டுள்ளன.

1. 1 உயிரொலி மாற்றங்களின் சிறப்பு

உயிரொலிகளின் அளவு, தன்மை ஆகியவற்றின் மாற்றமே இக்காலத்துக்குரிய சிறப்புக்கூறு ஆகும். இம்மாற்றம் முன்னரேயே தொடங்கி விட்டது.

2. 0 உயிர்கள்

2. 1 அளவு

நெடில் மெய்கள் அல்லது மெய்ம் மயக்கங்களுக்குப் பிறகு உயிர்கள் குறுகும் போக்கு உள்ளது.

காண்பாம் > காண்பம்
தண்ணீர் > தண்ணி

இக்கால உச்சரிப்பைக் கொண்டும், காண்போம் என்னும் மாற்று வடிவத்தைக் கொண்டும் காண்பம் என்பதிலுள்ள அகர உயிர் சற்று இதழ் குவிதலோடு ஒலிக்கப்பெறுகிறதோ என ஐயுறலாம்.

2. 2 தன்மை

2. 2. 1 சுரபத்தி

அகரம் முதலான உயிர்கள் மெய்கட்கு இடையில் வருகையில் மறைந்து மெய்ம் மயக்கங்கட்கு வழி வகுக்கின்றன. பின்னர் சுரபத்தி இகரம் அல்லது உகரம் தோன்றுகிறது.

2. 2. 1. அ. இ > உ

நாவளை அல்லது இதழொலி மெய்கள் வரும் சூழலில் உகரம் வருகிறது.

அடிமை > *அட்’மை > அடுமை

[ மெய்1 ] ‘உயிர்1, மெய்2 உயிர்2 மெய்3‘ என வரும் வேர்களின் வாய்பாட்டில் ‘உயிர்2‘ என்பது இகர உயிராகும் : ‘மெய்3’ என்பது வ் அல்லது ள் அல்லது ர் என்பதாகும். இந்நிலையில் இகரம் உகரமாகிறது.