பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

197

காட்டுகிறார். சான்று : செய்வான் > செய்குவான்

உண்பான் > உண்குவான்

இ. பிறவடிவங்கள்

நி்கழ்கால விகுதியைத் தோற்றுவிக்கப் பிறிதொரு முயற்சியும் இருந்தது. ‘செயா’ என்பது ‘செய்து’ என்னும் வாய்பாட்டு வினையெச்ச வகையைச் சார்ந்ததாகலாம். இதனுடன் ‘இரு’ அல்லது ‘கிட’ அல்லது ‘நில்’ என்னும் துணைவினை ‘செயலின் தொடர்ச்சியை’ அல்லது ‘செயல் முடியாமையைக்’ காட்டச் சேர்க்கப்பட்டது. இவ்வாறாக ‘நிகழ்காலம்’ பற்றிய கருத்துத் தோன்றியது. ‘செயா’ என்பதை எதிர்மறை வினையெச்சமாகவும் கொள்ளலாம்.( செயல் முடியவில்லை என்பதைக் காட்ட இங்ஙனம் கொள்ளலாம்). உரை நூல்களில் பின்வரும் வடிவங்களைக் காண்கிறோம்:

செய்யாகிடந்தான்
செய்யாநின்றான்
செய்யாவிருந்தான்

மேலே கூறப்பட்ட வடிவங்களில் பிறழ்பிரித்தலால் கிடைத்தவையாகிய ஆகிடந்து, ஆநின்று, ஆவிருந்து என்பனவற்றை நிகழ்கால வடிவம் எனக் கொள்ளலாயினர்.

சான்று : செய்யாநின்றான் > செயா + நின்று + ஆன் > செய் +
ஆநின்று + ஆன்

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த பவணந்தியார் காலத்தில், ‘ஆநின்று’ என்பது மட்டும் நிகழ்கால இடைநிலையாகக் குறிக்கப் பெற்றுள்ளது.
‘செய்கின்று’ என்ற நிகழ்கால வினையெச்ச வடிவம் வழக்கிலிருந்து மறைந்து விட்ட பொழுதிலும் ‘செயாநின்று’ என்ற வடிவம் இன்னும் வழக்கில் உள்ளது.

ஆ. நாயக்கர் காலத் தமிழ்

வரலாற்று மூலாதாரங்கள்

பதினான்காம் நூற்றாண்டில் மாலிக்காபூரின் தென்னகப் படையெடுப்புகளுக்குப் பின்னர், தமிழர்கள் தங்கள் உரிமையை இழந்தனர். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தென் மாவட்டக் கிளைமொழிகளின் வழக்குச் சொற்களில் எழுதப்பட்ட நூல் ஒன்றின்