|
தமிழ் மொழி வரலாறு 196
வியங்கோள் வினை
படர்க்கையில் மட்டுமே வருவதாகத் தொல்காப்பியம் வரையறுக்கிறது. சட்டத்துறையில் இருந்த
வழக்காற்றின் விளைவே இது எனலாம். கல்வெட்டுக்களில் இது வருமிடங்களில் ஒரு தொடரமைப்புப்
பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் வியங்கோளின் பழைய ஆட்சியேயாகும். ‘ஆ’ என்ற
வேரிலிருந்து வந்த வியங்கோள் வடிவாகிய ‘ஆக’ என்பது ‘வும்’ விகுதியைப் பெறுகிறது. ‘ஆகவும்’
என்பது வினைமுற்றுக்குப் பின்னர் வருகிறது. ‘யாருக்குக் கடமை உரியது’ என்பதை இது
தெளிவுபடுத்துகிறது. இப்பயனிலையின் வேர் ‘கட’ (< கடமை) என்பதாகும். கல்வெட்டுக்களில்
பின்வரும் வடிவங்கள் காணப்படுகின்றன.
‘கடவேனாகவும்’வும்’
‘கடவீராகவும்’
‘கடவாராகவும்’
‘ஆகவும்’
இம் மாற்று
வடிவங்கள் எல்லாம் கிளைமொழிகளில் வழங்கத் தொடங்கி இருக்கலாம். இலக்கிய மொழியில்
அவற்றின் வழக்கு குறைவு. கிளைமொழிகளில் - சான்றாகத் திருநெல்வேலிக் கிளை மொழியில் -
‘அழுகு’, ‘உண்கு’ முதலிய வடிவங்கள் காணப்படுகின்றன. பகர மெய் மூக்கொலிகட்குப் பின்னர்
ஒலிப்புடை ஒலியாகிறது.
சான்று : (unpan)
> (unban)
ஆனால்
ஒலிப்புடை வெடிப்பொலி தவிர்க்கப்படுகிறது. ஏழாம், எட்டாம் வினைவிகற்ப வாய்பாடுகளில்
வினைவிகற்பங்கட்குப் பின்னும் வேர்கள் மொழியிறுதியில் உகரச் சாரியையைத் தக்க
வைத்துக்கொள்கின்றன.
உயிர்களுக்கும்,
இடையின மெய்களுக்கும் பின்னர் பகர மெய் வகர மெய்யாகிறது. இவ்வினைகளில் வகர மெய்
எதிர் காலத்தைக் காட்டுகிறது.
| சான்று : |
உண்பான் > உண்ணுவான்
திண்பான் > தின்னுவான் |
அநேகமாக எல்லா
வேர்களும் குகரச்சொல்லாக்க விகுதியைப் பெறும். இவற்றில் எதிர்காலத்தை வகரமெய்
காட்டும். இத்தகைய கட்டற்ற அல்லது நிபந்தனையற்ற மாற்றம் எதிர்காலம் காட்டும் எல்லா
வடிவங்களிலும் வருவதாகச் சேனாவரையர் சுட்டிக்
|