|
தமிழ் மொழி வரலாறு 235
ஆ. பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு
1. பண்டைக் கால
உறவுகள் - முண்டா மொழி
திராவிடர்களின் தொடக்க கால அண்டைமொழிகள் முண்டா மொழிகளாகும். எனவே அவற்றின்
செல்வாக்கைப் பழந்தமிழில் காணமுடியும். தவக்காய், தவளைக்காய், தவளை ஆகிய சொற்கள் ‘tabeg’ என்ற சொல்லிலிருந்து வந்தவை.8
கத்தரிக்காயைக் குறிக்கும்
‘வழுதுணங்காய்’ என்ற
சொல்லும் இச்சொல்லிலிருந்தே வந்ததாகக் கொள்வர். (baho
என்பது பழத்தையும் tiong
என்பது
கத்தரிக்காயையும் குறிக்கும்.)
தமிழில் உள்ள ‘இளநீர்’ என்ற சொல் புதிராக
உள்ளது. ‘இளநீர்’ என்பதன் பொருள் முதிராத தேங்காயிலுள்ள இனிய நீர் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்டிரிக் மொழிகளில் ‘niyor’ என்ற சொல்
தேங்காயைக் குறிக்கிறது.9
இச்சொல் ‘இளநீர்’ என்னும் சொல் வினை விளக்கும். ‘misei’,
‘bisai’ என்னும் ஆஸ்டிரிக் மொழிச்
சொற்களிலிருந்து ‘மீசை’, ‘வீசை’ என்னும் சொற்கள் வந்தன.10
பிற செல்வாக்குகள்;
எதிரொலிச் சொற்கள்
மேலே கூறப்பட்ட
சொற்களைத் தவிர, வேறு செல்வாக்குகளும் காணப்படுகின்றன. இவை இலக்கணத்தில் நிரந்தர
இடம்பெறவில்லையாயினும், தமிழ்மரபுத் தொடர்களில் ஆட்சி செலுத்துகின்றன. இவ்வரிசையில்
முதலில் வருவன எதிரொலிச் சொற்களாகும் (echo
words).
தமிழில், முதலில் ஒரு சொல் கூறப்பட்டு முதலசையில் மாற்றத்துடன் மீண்டும் கூறப்படுகிறது.
“( மெய் )நெ. உயிர்
/ கு. உயிர் > கி / கீ”
பிற இந்திய
மொழிகளில் ககர வெடிப்பொலிக்குப் பதிலாக வேறு வெடிப்பொலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மிகுதியும்
வழக்கில் உள்ள எதிரொலிச் சொற்கள் பற்றிப் பழந்தமிழ் இலக்கண நூல்கள் எதுவும்
குறிப்பிடவில்லை. எதிரொலிச் சொற்களில் இடம் பெறும் இரண்டாவது சொல் இக்காலத்
|
8.
Sylvain Levi
and others : Pre-Aryan and Pre-Dravidan in India
9.
Sylvain Levi
and others : Pre-Aryan and Pre-Dravidan in India
10.
Sylvain Levi
and others : Pre-Aryan and Pre-Dravidan in India.
|
|