|
தமிழ் மொழி வரலாறு 236
தமிழில் கீழ்மைப் பொருளை (Semantic degradation) அடைந்துள்ளது.
| சான்று : |
சம்பளம்
கிம்பளம்
|
இங்குக்
‘கிம்பளம்’ என்பது ‘லஞ்ச’த்தைக் குறிப்பதாகும். இந்தியா முழுவதிலும் சிறப்புப் பெற்றுத்
திகழும் எதிரொலிச் சொற்களை முண்டா மொழி மூலத்திலிருந்து வந்ததாகவே விளக்க முடியும்.
உளப்பாட்டுத் தன்மைப்
பன்மை
இத்தகைய
செல்வாக்கில் இரண்டாவதாக வருவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வடிவம் பற்றியது. கோண்டி
போன்ற சில நடுத் திராவிட மொழிகள் நீங்கலாக ஏனையவற்றில் இதற்குத்
தனிப்பெயர்ப்பதிலி அடியோ விகுதியோ கிடையாது. தன்மைப் பன்மைப் பெயர்ப்பதிலி
வடிவங்களில் சில, உளப்பாட்டுப் பன்மையைக் குறிக்கும் வகையில் வளர்ச்சியுற்றன. ஆனால்
அவை காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் வேறுபடுவதால் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைச்
சுட்டிக்காட்ட முடியாது. ‘உளப்பாட்டுத் தன்மைப் பன்மை,’ ‘உளப்படுத்தாத தன்மைப் பன்மை’
என்று வேறுபடுத்தப்படும் பொதுவான போக்கையே சுட்டிக்காட்ட முடியும்.
‘நாம்’ என்பது உளப்பாட்டுப் பன்மை வடிவம் எனக்
கூறப்படுகிறது. தொல்காப்பியர் இவ்வாறு கூறவில்லை.*
சங்க இலக்கியம் இத்தகைய பாகுபாட்டைப் பின்பற்றினாலும் கூட அது ஒரே மாதிரியாக
அமையவில்லை.11
இக்காலத் தமிழில் ‘நாம்’ என்பது உளப்பாட்டுப் பன்மையாகும்; ‘நாங்கள்’ என்பது
முன்னிலையை உளப்படுத்தாத பன்மையாகும். மிகையாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘கள்’ விகுதியே
இவ் வேறுபாட்டிற்குக் காரணமாகும். யாழ்ப்பாணத் தமிழில் ‘எங்கள்’ என்பது உளப்பாட்டுப்
பன்மையாகும். ஆனால் தமிழகத்தில் இது முன்னிலையை உளப்படுத்தாத தன்மைப் பன்மையாகும்.
இடத்தால் வரும் வேறுபாட்டிற்குச் சான்றாக இதைச் சுட்டிக் காட்டலாம்.
|
*
தொல்காப்பியம், 647.
11.
சிலப்பதிகாரம், கடலாடு
காதை, 27 ஆவது வரி
“அமரர்
தலைவனை வணங்குதும் யாமென”.
|
|