பக்கம் எண் :

வட
 

தமிழ் மொழி வரலாறு

237

வடமொழி

பழைய உறவுகள்

முன்னுரை

ஆரியர்கள் வேதகாலத்திலிருந்து திராவிடர்களுடன் தொடர்பு கொண்டதாக நம்பப்படுகிறது. வரருசிக்கு முற்பட்ட இலக்கியங்களில் தென் திராவிடத்துடனான ஆரியர்களின் தொடர்பு பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. வரருசிக்கு முன்னரே ‘ஆரிய-தென் திராவிட’ உறவு இருந்திருக்கலாம் என்பதை இது மறுப்பதாகாது. பௌத்தமும் சமணமும் தங்கள் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடைய சமயங்களாதலின் (missionary religion) அவை தங்கள் மதக்குருமார்களைத் தமிழகத்திற்கும் தொலைவிலுள்ள இலங்கைக்கும் அனுப்பின. எனவே குகைக் கல்வெட்டுக்களில் பிராகிருதச் சொற்கள், பெயர்கள் பலவற்றை நம்மால் காண முடிகிறது. இச்சொற்கள் பேச்சு மொழிகளான பிராகிருதம் அல்லது பாலி மொழியிலிருந்து வந்திருக்க வேண்டும்.

பிராகிருதத்தின் காலம் : தொல்காப்பியம்

தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழியைப் பற்றிப் பொதுவாக ‘வடசொல்’ எனக் குறிப்பிடுகிறார்.12 இச் சொல் சமஸ்கிருதத்தைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. ஆனால் இச்சொல் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளையும் குறிப்பதாயிருக்க வேண்டும். செய்யுளில் இடம் பெறும் நால்வகைச் சொற்களில் ஒன்றாக வட சொற்களைத் தொல்காப்பியர் குறிப்பிடுவது குறிக்கத்தக்கது. அந் நால்வகைச் சொற்கள் வருமாறு :

1. இயற்சொல் - சாதாரண, எளிய சொற்கள்
2. திரிசொல் - இலக்கியச் சொற்கள். ஒரு பொருள் பல சொல்லும், பல பொருள் ஒரு சொல்லும் இதில் அடங்கும்.
3. திசைச்சொல் - கிளைமொழிச்சொற்கள்
4. வடசொல்

சமஸ்கிருதத்துடனும் பிற மொழிகளுடனும் தமிழின் தொடர்பு தொல்காப்பியர் காலத்திலேயே நெருக்கமடைந்தது


12. தொல்காப்பியம், 880

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்
றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே”.