|
தமிழ் மொழி வரலாறு 238
என்பதை இது காட்டுகிறது. உலகம் (> லோக), காலம் (> கால) முதலிய
சொற்கள் சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தவை என்பர். ஆனால் சில சொற்களில் காணப்படும்
தற்செயலான வடிவ ஒற்றுமையைக் கொண்டு அவற்றைச் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவை என முடிவு
கட்டக் கூடாது எனப் பழைய உரையாசிரியர்கள். சுட்டிக் காட்டுவர்13
குறுகிய அளவு உடைய இசைப்பாடல்களைக் குறிக்கப் ‘பண்ணத்தி’ என்ற சொல்
தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.14
Prajnapti’
என்ற
சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படும். சமணர்களின் நீண்ட இலக்கியப்
படைப்புகளைக் குறிக்கும் ‘பண்ணத்தி’ என்ற சொல்லிலிருந்து தொல்காப்பியர் குறிப்பிடும்
‘பண்ணத்தி’ மாறுபட்டது. பழைய உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டுவது போல, தொல்காப்பியர்
குறிப்பிடும் ‘பண்ணத்தி’ என்பது ‘பண-’ என்ற தமிழ் வேரிலிருந்து வந்ததாகும்.15
தொல்காப்பியத்தில் ‘காமம்’ முதலான சமஸ்கிருதச்சொற்கள் உண்டு. அனைத்திந்தியத் தன்மை
உடைய ‘அறம்’, ‘பொருள்’, ‘காமம்’ என்னும் கருத்துருவாக்கம் தொல்காப்பியத்திலும்
காணப்படுகிறது.
தொல்காப்பியர் காலத்தே வழக்கில் வாராத வடிவங்களில் எல்லாம் பல சமஸ்கிருதச்
சொற்கள் சங்க இலக்கியங்களில் வருகின்றன.
சான்று : யவனர்16,
யூபம்17
சமஸ்கிருதப்
பெயர்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன.
மார்க்கண்டேயனார்18
உருத்திரன்19
|
13.
தொல்காப்பியம் 541, நச்சினார்க்கினியர் உரை.
14.
தொல்காப்பியம் 1424
“பாட்டிடைக்
கலந்த பொருள வாகிப்
பாட்டின்
இயல பண்ணந் தியல்பே”.
15.
தொல்காப்பியம், 1424,
இளம்பூரணர் உரை.
16.
புறநானூறு, 56. 18.
17.
புறநானூறு, 16. 21.
18.
புறநானூறு 865.
19.
குறுந்தொகை, 274.
|
|