|
தமிழ் மொழி வரலாறு 250
மொழியிடையில் உள்ள ஒலிப்பிலா வெடிப்பொலி இரட்டித்தலையும்
காண்க. பிற்காலத்தில் மொழியிடையில் வரும் தனி வெடிப்பொலி ஒலிப்புடை
வெடிப்பொலியைக் குறிக்கத் தொடங்கியதால், ஒலிப்பிலா வெடிப்பொலியைக்
குறிக்க நெடில் வெடிப்பொலி இடம் பெறலானது.
தெற்கு, கிழக்குப்
பகுதிகளின் மொழிகள்
சிங்களம்
கிறித்து
பிறப்பதற்கு முன்னரே தமிழர்கள் இலங்கையோடு தொடர்பு
கொண்டிருந்தனர். பழங்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசர்களில் மக்கள்
போற்ற செங்கோலோச்சிய எலாரா (Elara)
போன்ற சிலர் தமிழர்களாவர்.
இலங்கையுடனான இத்தகைய ஆரம்பக்கால உறவுகளின் விளைவாகச் சிங்களச்
சொற்கள் தமிழில் இடம் பெற்றுள்ளன.
ஈழம் (Simhala
> Sila > ila)
முருங்கை (murunga)
இச்சொல்
பழைய உரையாசிரியர்களால் குறிக்கப்பட்டுள்ளது.29 இலங்கைத்
தமிழில் பல சிங்களச் சொற்கள் காணப்படுகின்றன. தமிழகமெங்கும் வழக்கில் உள்ள
‘பில்லி’ (billi) என்ற சொல் சிங்களத்திலிருந்து வந்ததாகும்.
கிழக்குக் கடற்பகுதிகள்
கிழக்குக் கடற்பகுதிகளுடன்
தமிழர்கள் பழங்காலத்திலேயே தொடர்பு
கொண்டிருந்தனர்.
தக்குவாபாவில் (Takuapa)
தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன.
காழகம் அல்லது கடாரம்30
தாய்லாந்திலுள்ள ‘kedah’
என்பதாகும். ‘தாய்லாந்து’,
தமிழில் சீயம் என்றழைக்கப்படுகிறது. தக்கோலி (takkoli),
அருமணவன்
(arumanavan),
கிடாரவன் (Kitaravan) முதலிய நறுமணப்
பொருள்கள்
தாம் விளையும் இடத்தின் (கீழைக் கடற்பகுதிகள்) பெயரையே தம் பெயராகக்
கொண்டுள்ளன. இவை சிலப்பதிகாரத்தில் இடம் பெறுவதோடு அவை அடியார்க்கு
நல்லாரால்
இங்ஙனமே விளக்கப்படுகின்றன31
‘சவ்வரிசி’ என்பதிலுள்ள
‘சவ்’ என்பது மலாய்
|
29.
வீரசோழியம், 59, உரை.
30. Nilakanta Sastri :
Foreign Notices of
South India.
31.
சிலப்பதிகாரம்
XIV, 108, அடியார்க்கு நல்லார் உரை.
|
|