பக்கம் எண் :

Grahanam
 

தமிழ் மொழி வரலாறு

249

Grahanam > Kiraki (கிரகி)
Cevanam > cevi
(சேவி)

‘அனம்’ என்பதைப் பெறாத ‘சித்ரம்’ (Citram) என்பது போன்ற பெயர்ச்சொற்களின் ‘அம்’ விகுதி (முடிவு) நீக்கப்பட்டு இகர விகுதி சேர்க்கப்படுகிறது.

சான்று : சித்தரி

ஈரேவல் சொற்களோடு ஒப்புமையாக்கமான இவையெல்லாம் 11 ஆவது வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்தவையாகும்.

அகரத்தில் முடியும் சொற்கள், பெண்பால் ஒருமையைக் குறிக்குமாயின் அவை ளகர மெய்யீற்றைப் பெறுகின்றன; ஆண்பால் ஒருமை னகர மெய்யீற்றைப் பெறும்; பலர்பால் ரகர மெய்யைப் பெறும். அஃறிணையைக் குறிக்கையில் மகர மெய்யைப் பெறும்.

yaksa > iyakkan, iyakkar இயக்கன், இயக்கர்)
ratna > irattinam (இரத்தினம்)

கடன் வாங்கப்பட்ட சொற்களின் பொருள் பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகிறது. ‘அவசரம்’ என்பதன் பழைய பொருள் ‘வாய்ப்பு’ என்பதாகும். இன்று அதன் பொருள் ‘விரைவு’ அல்லது ‘மிகையார்வம்’ என்பதாகும். இத்தகைய பொருள் மாறுதல்களைப் பற்றி நாம் இங்கு ஆராய வேண்டியதில்லை.

தமிழாக்க முறையின் முக்கியத்துவம்

சமஸ்கிருதச் சொற்களைத் தமிழாக்கும் முறை விரிவாக விளக்கப்பட்டது. இவை பிறமொழிச் சொற்களையும் தமிழாக்கப் பயன்படும் என்பதால் இங்ஙனம் விரித்துக் கூறப்பட்டது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சில செய்திகளைப் பொதுமையாக்கிக் கூறலாம். சமஸ்கிருதத்தில் மொழி முதலசையில் வரும் ரகர மெய்க்கு முன்னர்த் தமிழில் அகர முன்வைப்புயிர் பழங்காலத்தில் இடம் பெற்றது. பின்னர் இகரம் அவ்விடத்தில் வரலானது. இங்ஙனமே சுரபத்தியும் இடம்பெற்றது.

பழைய வடிவம் புதிய வடிவம்
சக்கரம் சக்கிரம்
அரதனம்

இரத்தினம்