பக்கம் எண் :

மூன
 

தமிழ் மொழி வரலாறு

248

மூன்றாவது நிலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகும். இது அநுஸ்வாரம் கடையண்ண மூக்கொலியாக உச்சரிக்கப்பட்டதன் விளைவாகும். பிற மெய்களுக்கு முன்னர் இம்மூக்கொலி இன வெடிப்பொலியைப் பெறுகிறது. சுரபத்தி இகரம் இம்மெய்மயக்கத்தைச் சிதைக்கிறது.

mamsa > manca > mankicam (மாங்கிசம்)
vamsa > vanca > vankicam (வங்கிசம்)

ரகர மெய்க்குப் பின்னர் வரும் மெய்கள்

தென்னிந்தியாவில் ரகர மெய்க்குப் பின்னர் வரும் மெய்கள் நெடில் மெய்களாக எழுதப்பட்டது காணப்படுகிறது.

karma > karmma (கர்மம்)
partipa > parttipa > parttivar (பார்த்திவர்)

மொழியிடை வெடிப்பொலி இரட்டித்தல்

பிற மெய் மயக்கங்களில் மெய்யொலி இழப்போ அல்லது சுரபத்தியோ
உள்ள பொழுது, வெடிப்பொலியானது தனக்கு முன்னர் மூக்கொலியைப் பெற்றிருக்கவில்லையாயின் - இரட்டிக்கிறது. (வீரசோழியம், 59)

pakva > pakkuvam (பக்குவம்)
cakra > cakkiram (சக்கரம்)
ratna > irattinam (இரத்தினம்)

தமிழமைப்பு

பிறமொழிச் சொல்லைத் தமிழ் மொழி மரபுக்கு உட்படுத்தும் போக்கு மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக குற்றியலுகர முடிவைச் சுட்டிக்காட்டலாம். பிறமொழிச் சொற்கள் தமிழுக்கு வரும் பொழுது குற்றியலுகரத்தைப் பெறுகின்றன. ‘உலகு’ (இது ‘லோக’ என்னும் வடமொழிச் சொல்லினடியாகத் தோன்றியதாயின்) என்பதை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

இலக்கணம்

சமஸ்கிருதப் பெயர்ச் சொற்களிலிருந்து சில வினை வேர்கள் தமிழில் ஆக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எந்த வேருடன் ‘அனம்’ (anam) என்பதைச் சேர்த்தாலும் அது பெயர்ச் சொல்லாகும். ‘அனம்’ என்பது நீக்கப்பட்டு இகர விகுதி சேர்க்கப்படத் தமிழ் வினைவேர் கிடைக்கிறது.