பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

257

கான சொற்களே குறிப்பாகத் தெலுங்கிலிருந்து பெறப்பட்டன என்பதை இவ்வாராய்ச்சி புலப்படுத்தும்.”

வடசொற்களைத் தமிழாக்கப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையே இச்சொற்களைத் தமிழாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான உயிரொலி மாற்றங்கள் மொழியிடையில் நிகழ்கின்றன. முன்னர் விளக்கப்பட்டதுபோல ‘விரைந்தொலித்தல்’, ‘சுரபத்தி’ ஆகியவற்றின் விளைவே இது.34

கன்னடம்

பழங்காலத்திலிருந்தே கன்னடமும் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்தது. சங்க இலக்கியங்களில் வரும் வடுகர் என்னும் சொல் கன்னடர்களைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. ஹொய்சளர்கள் சோழ நாட்டு அரசியலில் தலையிட்டு ஹொய்சள இளவரசன் தமிழகத்திலேயே (குறுகிய காலமான போதிலும் கூட) ஆட்சியை நிலைநாட்டிய காலமாகிய 13ஆம் நூற்றாண்டில் கன்னடச் செல்வாக்கு உச்சநிலை எய்தியது. விசயநகரப் பேரரசர்களில் சிலரும் கன்னடத்தவர்களாவர். இவர்கள் வழியேயும் கன்னடச் செல்வாக்கு தமிழகத்தில் பரவியது. இத்தகைய செல்வாக்கிற்கான மற்றொரு மூலகாரணம் வீரசைவமாகும். இச்சமயப் பிரிவைச் சார்ந்த துறவிகள் தமிழகத்தில் குடியேறி மடங்களை நிறுவினர். சிவப்பிரகாசரும் சாந்தலிங்கரும் பெரும் வீரசைவப் புலவர்களாவர். மொழி முதலில் கடையண்ண வெடிப்பொலியும் அதைத் தொடர்ந்து குறுகிய முன் உயிரும் வரும் சொற்களில் கன்னடச் செல்வாக்கைத் தெளிவாகக் காணலாம். இக்கடையண்ண வெடிப்பொலி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இடையண்ணவொலியாகிறது. இந்நிலையில் வரும் கடையண்ண வெடிப்பொலி, நேரடிக் கன்னடச் செல்வாக்கையோ அல்லது தெலுங்கு மூலமான கன்னடச் செல்வாக்கையோ காட்டும்.

சான்று : கெம்பு

மலையாளம்

மலையாளமும் தமிழ் மொழியைப் பாதித்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் என்றழைக்கப்படும் நாஞ்சில் நாடு திருவாங்கூர் அரசின் கீழ் நீண்ட காலம் இருந்தது. தமிழும்



34. இந்நூலின் பக்கம் 259ஐக் காண்க.