பக்கம் எண் :

தம
 

தமிழ் மொழி வரலாறு

267

தமிழ் பேரகராதி 300 ஆங்கிலச் சொற்களையே தருகின்றது. ஆனால் இதைவிட இருமடங்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வரலாம்; இது குறிப்பாக நீதிமன்றங்களிலும், கல்லூரிகளிலும், பணியகங்களிலும் நிகழ்கிறது. தமிழகக் குழந்தைகள் தமது நாலாவது வகுப்பிலிருந்து பட்டம் பெறும் வரை ஆங்கிலத்தைக் கட்டாயப் பாடமாகப் படிக்கின்றனர். எனவே ‘மொழித் தூய்மைவாதிகளின்’ எதிர்ப்புகளுக்கு இடையிலும் பல ஆங்கிலச் சொற்கள் எல்லாவிடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.