தமிழ் மொழி வரலாறு
52
நெடில் மெய், குறில் மெய்யீற்று ஓரசை
வேர்ச் சொற்களில் உள்ள மெய் உயிர் முதல் மொழி முன் இரட்டிக்கிறது; இச்சொற்களின்
உகரவீறும் உயிர்முன் மறைகின்றது. இது போல ஆறாம் வினைவிகற்ப வாய்பாட்டில் இறந்தகால
இடைநிலை சேரும் போது வேரின் இறுதி உகரம் இழப்புற்று இறந்தகால இடை நிலைக்குப் பின்
உகரம் தோன்றுகிறது. வேறு உயிர்களில் முடியும் வேர்கள் ஓர் உயிரொலியால்
தொடரப்படுமாயின் யகரவுடம்படு மெய்பெறுகின்றன. இ, ஈ, எ, ஐ முதலிய உயிர்களில் முடியும்
வேர்கள் யகரவுடம்படு மெய்யையும் ஏனைய வகரவுடம்படு மெய்யையும் பெறுகின்றன.
|