பக்கம் எண் :

தம
 

 

தமிழ் மொழி வரலாறு

53

4.குகைக் கல்வெட்டுக்களின் மொழி

1 குகைக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், குறிப்பாக 1906 ஆம் ஆண்டிலிருந்து, பழைய பாண்டிய நாடென வழங்கும் தென் தமிழக மாவட்டங்களில் சிறிய கல்வெட்டுக்கள் பல தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் குகைகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இக்குகைகள் துறவிகளின் குளிர்காலத் தங்குமிடங்களாயிருந்திருக்கக்கூடும். இக்குகைகளில் வழ வழப்பாகச் செதுக்கப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. இக் கல்வெட்டுகளும் குகைகளும் இலங்கையில் காணப்படுவனவற்றைப் போன்றே உள்ளன. இவ்விரு இடங்களிலுமுள்ள கல்வெட்டுக்களும் பிராமி வரிவடிவத்தால் எழுதப்பட்டவையாகும். தொல் எழுத்தியல் அடிப்படையில் இக் கல்வெட்டுக்களின் காலத்தை கி. மு. மூன்றாம், இரண்டாம் நூற்றாண்டுகள் என நிர்ணயிப்பர். தென் தமிழகக் குகைக் கல்வெட்டுகளுக்கும் இலங்கைக் குகைக் கல்வெட்டுகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் இருப்பினும், இவற்றுக்கிடையில் குறிப்பிடத்தக்க அளவு இன ஒற்றுமை காணப்படுவதால், இவற்றைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என்று அழைப்பதில் தவறில்லை.

2 வாசிப்பு ( Decipherment)

முன்னர் அறியப்படாத, புதிய வரிவடிவத்தை ஆராய்ந்து, வாசித்தறிவது என்பது ஒருவகையில் துப்பறிவதை ஒக்கும், புதிய வரிவடிவத்தின் அக ஒருமைப்பாட்டினைக் காண ஏதுவாக மொழியியல் முறைகளைச் செம்மைப்படுத்துவதற்கும், அதன் வழியே அவற்றைச் சரியாக வாசித்தறியவும், புதிய வரிவடிவத்தை ஆராயும் முயற்சி உதவுகிறது.

சில ஒலி வழக்குகள் : உயிர்கள்

அசோகரது கல்வெட்டுக்களில் மெய்யையும் நெட்டுயிர் ஆகாரத்தையும் கொண்ட ஓரசையினைக் குறிக்கும் வரிவடிவின்