|
தமிழ் மொழி வரலாறு
66
வெள்ளாடை, பாகனூர்,
எருக்கோட்டூர், எவோமி நாட்டு, தெங்கு(நாடு), குன்றத்தூர், மதுரை, குமட்டூர் போன்ற இடப்
பெயர்கள் பலவும் உள்ளன. வாழும் கிராமத்தின் பெயர் இயற்பெயருக்கு முன்னர் வருவதே
வழக்கமாகும். இவ்வாறு வரும் இடத்தாலேயே இடப்பெயர் அடையாகிறது.
சான்று :
“எருக்கோட்டூர் ஈழக்குடும்பிகன்”. சில இடங்களில் நாட்டுப்பெயர்கள் அவ்வவற்றின் கட்டு
வடிவத்தில் இயற்பெயருடன் தொகையாக வருகின்றன. அவ்விடங்களில் நிலைமொழியின் மொழி
இறுதி மகரமெய் கெட்டு வருமொழிமுதல் வெடிப்பொலி இரட்டிக்கிறது.
சான்று : ஈழ(ம்) +
குடும்பிகன் > ஈழக்குடும்பிகன். ‘நெடு’, ‘இன’ - முதலியன கட்டு வடிவத்தில் இயற்பெயர்களுக்கு
முன் ஒட்டாகின்றன. கட்டுவடிவத்தில் வரும் அடைகளை - வேர்ச்சொற்களாகக் கருதலாம்; இன
வெடிப்பொலியால் தொடரப்பட்டால் அவ்வேரின் இறுதியில் மூக்கொலி இருக்கும். ஆனால்
வேரிலேயே மகரமெய் உண்டு எனக் கொள்வது சிறப்பு உடையதாகலாம். வெடிப்பொலியால்
தொடரப்படாத நேரங்களில் அம் மகரம் நிற்கும்; தொடரப்படும்போது வெடிப்பொலியின் இன
மூக்கொலியாகவும் நிற்கும்.
9 மாதிரி வாக்கியங்கள்
மாதிரி வாக்கியம் ஒன்றை இங்குத் தரலாம்.
| |
“வேண் கோசிபன்
கொட்டுபித்த
கல் காஞ்சணம்”.
|
‘வேண்’ என்பது
குறுநிலத் தலைவர்கள் குழு ஒன்றின் பெயராகும். ‘கோசிபன்’ என்பது
Kasyapa
என்ற ‘சமஸ்கிருத’ச் சொல்லின் தமிழாக்க வடிவமாகும்.
‘கொட்டுபித்த’ என்பது ஈரவேல் வினையின் பெயரெச்ச வடிவமாகும். இது கல் காஞ்சணம் எனும்
பெயருக்கு அடையாகிறது. ‘காஞ்சணம்’ என்பதன் பொருள் ‘உறையுள்’, ‘இருப்பிடம்’ என்பதாகும்.
‘காஞ்சணம்’ எனும் பெயருக்கு முன்னால் சேர்க்கப் பெற்றுள்ளது என்பதாலேயே ‘கல்’ என்பது
அதன் அடைமொழியாகிறது. எனவே இவ்வாக்கியத்தின் பொருள் பின்வருமாறு:- இது ‘வேண்’
வகுப்பைச் சேர்ந்த கோசிபன் என்பவனால் கொட்டுவிக்கப்பட்ட கல்லால் ஆகிய ‘காஞ்சணம்’.
|