|
தமிழ் மொழி வரலாறு 65
பெயர்த் தொடர்
வாக்கியங்கள்
குகைக் கல்வெட்டில்
உள்ள வாக்கியங்கள் கருத்து (
Topic), கருத்து
விளக்கம் (
Comment) என்ற அமைப்பில் உள்ள
பெயர்த்தன்மை கொண்ட வாக்கியங்களாகும். வழக்கமாக எழுவாய் அக்குகையை வழங்கியவர் யார்
அல்லது அதை வெட்டியவர் யார் என்பதைக் குறிப்பிடும். பயனிலை ‘கொட்டியோர்’ அல்லது
‘கொட்டுவித்தோர்’ என்பதைத் தெரிவிக்கும். தமிழில் மேலோட்டமாகப் பார்க்கையில்
எழுவாயையும் பயனிலையையும் இணைக்கும் இணைப்பு இல்லை. ஆனாலும் ஆழ்ந்த இலக்கண நிலையில் அது
இருக்கிறது. சில சமயங்களில் பயனிலையே கருத்தாகவும், எழுவாய் என்பது கருத்து விளக்கமாகவும்
அமைகிறது. செயப்படு பொருளாக வரும் அஃறிணைச் சொற்கள் வேற்றுமை உருபு எதையும் ஏற்காது
தொடர்ந்து வரும் வினைவேர்களுடன் இயைந்து நிற்கின்றன. “கொடை” என்பதைக் குறிக்கும்
பெயருக்கு முன்னர்ச் சில சமயங்களில் பெயரெச்சம் கருத்துவிளக்கம் என்ற நிலையில்
வருகின்றது; கருத்தாக வரவேண்டியவை வாராது உள்ளன. இம்முறை எழுவாயில்லாத தற்காலத் தமிழ்
வாக்கியங்களை நினைவுபடுத்துகிறது. ஒரே ஒரு இடத்தில் ‘இவ்’ என்னுஞ்சொல் இத்தகைய ‘கருத்து’
என்ற பொருளில் வந்துள்ளது. (இவ = இவை; பின்னைய வழக்கு) பெயரெச்சம் தான் விசேடிக்கும்
பெயரின் முன் வரும்.
8 சிறப்புப் பெயரும்,
இயற்பெயரும்
தற்காலத் தமிழிற் போலவே சிறப்புப் பெயரும் இயற்பெயரும் இரு
பெயரொட்டுகளாக அமைந்து அவ்வமைப்பினாலேயே ஒன்றையொன்று விசேடிக்கும் தன்மை
சுட்டப்பட்டது. சாத்தன், பிட்டன், கூல வாணிகன், ஆசான், அறிவன் முதலியன சாதி அல்லது
தொழிலை அடிப்படையாகக் கொண்டமைந்த பெயர்களாகும்.
தொல்காப்பியர் கூற்றின்படி சிறப்புப் பெயர்
இயற்பெயருக்கு முன்னர் வரவேண்டும். குகைக் கல்வெட்டுக்களைப் பொறுத்த வரையிலும் இது
உண்மையேயாகும்.
சான்று : வேண்
கோசிபன்; கணியன் இயக்குவன்; உபாசன் போத்தன், இவை ஒன்றையொன்று விசேடித்து நிற்கும்
உம்மைப் பொருட்டொடர்ச் சொற்களாகும்.
|