பக்கம் எண் :

New Page 7
 

தமிழ் மொழி வரலாறு

64

வேறுபாடு இல்லாதிருக்கலாம். பின்னர் அடுத்த கட்டத்தில் உயிர்களுக்கும், அரை உயிர்களுக்கும் முன்னர் பகரம் வகரமாகிறது. மூக்கொலிகளை அடுத்த பகரம் ஒலிப்புடை ஒலியாகும் மூன்றாவது கட்டமும் உண்டு. இன மூக்கினத்திற்குப் பின்னர் ஒலிப்புடை வெடிப்பொலிகள் மூக்கொலிகளாவது அடுத்து மேலும் ஏற்படும் மாற்றமாகும். குகைக் கல்வெட்டு மொழியில் பகரம் (-ப்-) மாற்றமுறவில்லை.

2 பெயர்கள்

சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளன என்பதை மீண்டும் இங்குக் குறிப்பிடலாம். இவை ஒவ்வொன்றிலும் ஒருமை, பன்மை என்ற பாகுபாடு உண்டு. உயர்திணை ஒருமையில் மேலும் ஆண்பால், பெண்பால் என்று இரு பிரிவுகள் உண்டு. உயர்திணைப் பன்மையில் இலக்கண நிலையில் ஆண்பால் பெண்பால் பாகுபாடு இல்லை. இதுபோல அஃறிணையிலும் ஒருமை, பன்மை இரண்டிலும் இலக்கண நிலையில் இப்பாகுபாடு இல்லை.

பெண்பால் விகுதி ஏதும் இக்கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. பௌத்த சமயக் குருக்கள் தங்குமிடமான ‘பாழி’ போன்ற பெயர்களை முன்பு குறிப்பிட்டது போல மேலும் ஆராய இடமிருக்கிறது என்றாலும் அடிப்படையில் அவை பெயர்கள் போலச் செயல் படுகின்றன என்றே கூறவேண்டும். இவைகள் ஆக்கப் பெயர்கள் (derived nouns) என்ற உணர்வே இன்னும் பேசுவோரின் மனத்தில் ஏற்படுவதில்லை. எனினும் அடிப்படைச் சொற்களிலிருந்து ஆக்கப் பெற்ற ஆக்கப் பெயர்கள் எனக் கொள்ளத்தக்கனவும் உள்ளன. மகர மெய்யில் முடியும் அடிப்படைப் பெயர்கள், அதை இழந்து -த்த்-ஐப் பெறுகின்றன. அதற்குப் பின்னர் ‘ஓர்’ விகுதி சேர்க்கப்படுகிறது.

சான்று : நிகமம் > நிகம + த்த் + ஓர் > நிகமத்தோர்

7 தொடரியல்

இயைபு:

திராவிட மொழிகளில் திணை, எண், பால், இடம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே இயைபு உள்ளது.

சான்று : “ஆரிதன் கொட்டுபித்தோன்”
                   “நிகமத்தோர் கொட்டிஓர்”