|
தமிழ் மொழி வரலாறு
63
காலங் காட்டும்
இடைநிலைகள்
இறந்த கால வினைகளில் வேர்களுக்குப்பிறகு ‘-ந் த்-’ அல்லது
‘-த் த்-’ உள்ளன. தமிழ்ச் சொற்களஞ்சிய அகராதி கூறும் 4, 10 ஆகிய வினைவிகற்ப வாய்பாட்டு
வகைகளில் இவை அடங்கும். மேலும் 5 ஆவது வினைவிகற்ப வாய்பாட்டில் அடங்கும் வேற்சொற்களும்
வருகின்றன. இவற்றின் அடிப்படை அமைப்பு :
|
(மெ){ |
கு |
}உ (மெ), மெ உ
அல்லது (மெ) உ (மெ) மெ
{ |
கு |
} |
|
நெ |
|
நெ |
உ மெ (மெ) உ இவ்வேர்ச்
சொற்களில் உகரவிறுதி மறைவிற்குப் பின்னர் இகரவிறுதி சேர்க்கப்பெறுகிறது. இம்முறையில்
அடையும் வடிவம் இறந்தகாலத்தைக் காட்டும். எனவே உண்மையில் இருவகையான வினைமுற்றாக்கங்கள்
உள்ளன. ஒன்று தகர இடைநிலை வினைமுற்றாக்கம். மற்றது இகர இடைநிலைபெற்ற வினை முற்றாக்கம்.
ஈரேவல் வினையும் அவை
அல்லா வினையும்
தமிழில் ஈரேவல்
வினைக்கும், அங்ஙனம் அல்லா வினைக்கும் வேறுபாடு உண்டு. இக்கல்வெட்டுக்களில் ஈரேவல்
வினைவிகுதியாகிய ‘பி’ வேருடன் சேர்க்கப்பட்டுள்ளமையைக் காண்கிறோம். இதனுடன்
வழக்கம்போல பெயரெச்ச விகுதியும் பால் விகுதியும் சேர்க்கப்படுகின்றன. சான்று :
“கொட்டுபித்தோர்”. பிற்காலத்தில் இது கொட்டுவித்தோர் என மாறும். குகைக்
கல்வெட்டுக்களில் பகரம் வகரமாக மாறாத வழக்கே காணப்படுகிறது.
பகரம் வகரமாக
மாறுவதில் இருவேறு கட்டங்கள் உள்ளதை நாம் கருதுதல் வேண்டும். மூலத் திராவிடமொழிக்
காலத்திலேயே பல திராவிட மொழிகளில் உள்ளது போல, வேர்ச் சொற்கள் என்ற நிலையில்
பகரம் வகரமாக மாறுவது இருந்தது. ஆனால் விகுதிகளைப் பொறுத்த வரையில் இத்தகைய சீரான
மாற்றம் காணப்படவில்லை. எனவே பின்வந்த நிலையிலும் விகுதிகள் ஒலிப்பிலா
வெடிப்பொலிகளாகவே இருந்தன. தமி்ழ் போன்ற சில மொழிகளில் வேரைப் பொறுத்த வரையில்
பகரம் வகரமாக (-ப்- > -வ்) மாறிப் பின்னர் மீண்டும் வகரம் பகரமாகியது. (வ் - >
-ப்-) எனக் கொள்ள வேண்டும். எனவே வேரிலுள்ள வெடிப்பொலிகளுக்கும் ஏனைய இடங்களில் வரும்
வெடிப்பொலிகளுக்குமிடையே
|