தமிழ் மொழி வரலாறு
68
5.தொல்காப்பியத் தமிழ் -
ஒலியனியல்
1 தொல்காப்பியத்தின்
காலம்
தமிழில் இன்று
கிடைக்கும் நூல்களில் தொன்மையானது தொல்காப்பியமே. பிற்காலத்தைச் சேர்ந்ததாகக்
கூறப்படும் சில கருத்துக்கள், விதிகள், சொற்கள் என்பன தொல்காப்பியத்தில்
காணப்படுவதால், அவற்றை அடிப்படையாகக் கொண்டு அதன் காலத்தைக் கி. பி. ஐந்தாம்
நூற்றாண்டு வரைக்கும் பின் தள்ளுவர்.1
ஆனால் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியத்தையும் பண்டைக்காலத்து உரையாசிரியர்களைப்
போல, ஆழ்ந்து ஆராய்ந்தவர்கள் தொல்காப்பியத்தைச் சங்க இலக்கியங்களுக்கெல்லாம்
முற்பட்டது என்பர்.2
சில தொல்காப்பிய விதிகள் சங்க காலத்தில் வழக்காறற்றுப் போயின என்பதற்குச்
சான்றாகப் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
1. ‘வா’, ‘தா’ முதலிய
வினையடிகளின் ஆட்சி தன்மை, முன்னிலை ஆகிய இரு
இடங்களுக்கே உரியது,3
எனல்.
2. ‘செல்’, ‘கொடு’
முதலிய வினையடிகளின் ஆட்சி படர்க்கைக்கே உரியது,4
எனல்.
1.
S.
Vaiyapuri Pillai :
History of Tamil Language and Literature,
Madras,
1956,
p 58.
2.
இறையனார் களவியல் உரை, பாயிரம்.
3.
தொல்காப்பியம், 512
|
“அவற்றுள்
தருசொல் வருசொல்
ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ
ரிடத்தே”. |
4.
தொல்காப்பியம், 513
‘ஏனை யிரண்டும் ஏனை இடத்தே’.
தோடா மொழியில்
கொடு”என்பது இங்ஙனம் வரன்முறைக்கு உட்பட்டுப் பயன்படுத்தப்படுவதாக எமனோ கூறுகிறார்.
M. B. Emeneau,
Language,
Vol.
21, 1945.
|
|