தமிழ் மொழி வரலாறு
69
3. உவம உருபுகளின் ஆட்சி பற்றிய வரன் முறைகள்.
4. வியங்கோள்
வினையின் ஆட்சி படர்க்கைக்கே உரியது,5எனல்.
5.
இயற்பெயர்,
சிறப்புப்பெயர் ஆகியவற்றின் ஆட்சி
பற்றிய வரன் முறைகள்.6
6. ‘தான்’, ‘பேன்’
முதலிய இயற்பெயர்களின் வழக்காறு.7
இவ்விதிகளைச் சங்க
காலத்திற்குப் பின்னால் எழுந்த வளர்ச்சிகள் எனக் கூறமுடியாது; ஏனெனில் அவை சங்க
காலத்திற்குப் பிற்பட்ட கால இலக்கியங்களில் ஆட்சி பெற்றிருக்கவில்லை.
முரண்பாடுகள்
தொல்காப்பிய
நூற்பாக்கள் சிலவற்றுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு இரண்டு விதமான
விளக்கங்கள் தரலாம்.
1.
தொல்காப்பியத்தில் சில இடங்களில் தட்டுப்பாடுகள் காணப்படுவதாக
எண்ணித்
தொல்காப்பியத்தைப் பயின்ற மாணவர் சிலர், சில நூற்பாக்களைத் தாங்களாகவே
சேர்த்திருக்கலாம்.
2. தொல்காப்பியம்
என்பது தனிப்பட்ட ஒருவரால் எழுதப்பட்டதென்பதைவிட, காலப்போக்கில் சில
சிந்தனைப் போக்குகளை வளர்த்துக்
கொண்டு வரும் ஓர் இலக்கணக் கோட்பாட்டினரின் கூட்டு முயற்சியால் உருவானதொன்றாக இருக்கக்கூடும்.
5.
தொல்காப்பியம், 711
“அவள்
முன்னிலை தன்மை ஆயீ
ரிடத்தொடும்
மன்னா தாகும்
வியங்கோட் கிளவி”.
6.
தொல்காப்பியம், 524
“சிறப்பி னாகிய
பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி
முற்படக் கிளவார்”.
7.
தொல்காப்பியம், 351
“தானும் பேனும் கோனும்
என்னும்
ஆமுறை இயற்பெயர்
திரிபிடன் இலவே”.
|
|