பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

70

தொல்காப்பியப் பொருளதிகார இறுதியில் உள்ள மரபியலில் ‘பிள்ளை’ என்ற சொல் ‘குழந்தையை’க் குறிக்க ஒரு பொழுதும் வழங்காது எனக் கூறப்படுகிறது.8 ஆனால் பொருளதிகாரப் புறத்திணை இயலில் ‘பிள்ளை’ என்ற சொல் ‘குழந்தையை’க் குறிக்க வழங்குகிறது.9 மரபியலில் வரும் சில நூற்பாக்கள் செய்யுளில் ‘நூல்’ பற்றிக் கூறப்பட்டவைகளின் தேவையற்ற ‘விரிவே’ ஆகும். இந்நூற்பாக்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

பல்வேறு அடுக்குகள் - இவற்றுள் பெரும்பகுதி பண்டைக் காலத்ததே

எனவே தொல்காப்பியத்துக்குள்ளேயே உள்ள பழைய வழக்கையும், பின்னைய வழக்கையும் பிரித்தறிய வேண்டும். எந்தெந்த விதிகள் விளக்கங்கள் முற்பட்டவை அல்லது சமகாலச் சான்றோர்களிடமிருந்து பெறப்பட்டவை, எவை முதன்முதலாகக் கூறப்பட்டவை என்பவற்றைத் தொல்காப்பிய நூற்பாக்களே வேறுபடுத்துகின்றன.10 இவை தொல்காப்பியர் காலத்துக்கு


8. தொல்காப்பியம், 1503, 1510, 1513, 1523

“அவற்றுள்
பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை”.
“பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டில்லை
கொள்ளுங் காலை நாய் அலங்கடையே”.
“மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பாலான”.
“பிள்ளை குழவி கன்றே போத்தெனக்
கொள்ளவும் அமையும் ஒரறி உயிர்க்கே”.

9. தொல்காப்பியம், 1006

“. . .வருதார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல்
என்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும். . .”

10. தொல்காப்பியம், 2, 130. . .

“எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”.
“மென்மையும் இடைமையும் வரூஉங் காலை
இன்மை வேண்டும் என்மனார் புலவர்”.