பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

88

சான்றாக ‘ஊ + உ’ என்பது உடம்படுமெய் பெறும் பொழுது ‘உ [ வ் ] உ ~ உ வ் உ’ என்றும், உடம்படுமெய் பெறாத பொழுது ‘ஊ’ என்றும் இருந்திருக்க வேண்டும். ஈருயிர்கள் உருபன் எல்லையில் வரும்பொழுது குழப்பத்தைத் தவிர்க்கவும் எல்லையைத் தெளிவாகக் குறிப்பிடவும் முதலுயிரானது நெடிலாகிறது. அடுத்த உயிர் இயல்பாக உள்ளது போலவே குறிலாக உச்சரிக்கப்படுகிறது. இந்நுட்பம் இன்று கூடப் பேச்சுத் தமிழில் காணப்படுகிறது.

சான்று : “முத்தைய + உடையார் > முத்தையா உடையார்.”

‘தழு + உ > தழூஉ”. இது தொல்காப்பியரால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.44 உடம்படுமெய்களான வகர, யகர மெய்கள் பின்னர் வளர்ச்சியுற்றவையாகும் ; எனினும் அவை தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டன எனலாம். இக்காலத் தமிழில் அடுத்தடுத்து வரும் இரு உயிரொலிகள் உடம்படுமெய்யின்றி உச்சரிக்கப்படும் பொழுது குரல் வெடிப்பொலியுடன் உச்சரிக்கப்படுகின்றன. ‘அ? அ’, ‘இ? இ’ என்பன இதற்குச் சான்றுகளாகும். குழந்தைகள் இவ்வொலிகளைச் சிறுவயதில் பள்ளிக்கூடங்களில் பயிலுகின்றன. குரவ்வளை வெடிப்பொலி இங்ஙனம் வருதல் ‘விட்டிசைத்தல்’ எனப்படும். குரல்வளை வெடிப்பொலியும் ஒரு வெடிப்பொலியாதலின் அது பிற வெடிப்பொலிகளுடன் இசைந்து நிற்கும். இது ‘விட்டிசை எதுகை’ எனப்படும்.45 விட்டிசைத்தல் இல்லாதபொழுது உயிர் மயக்கங்கள் ஏற்படுகின்றன. அவை பின்வருமாறு மாறுகின்றன : அ + அ> ஆ; அ + இ> ஐ. ‘பகல்’ என்ற சொல்லில் உள்ள ககர மெய் மறையும்பொழுது, இரு அகர உயிர்களும் இணைந்து ஆகாரமாகின்றன. பகல் > ப்அஅல் > பால். குகைக் கல்வெட்டுக்களில் ‘செய்தா அன்’ என்ற சொல் வருகிறது. செய்த + அன் > செய்தான்’ என இது முன்னர் விளக்கப்பட்டது. அகரத்தில் முடியும் வேர்களில் ஈற்று அகரம், தொழிற்பெயர் விகுதியாகிய இகரத்தால் தொடரப்படும்பொழுது ஐகாரமாகிறது. நட + இ > நடை, ‘ஆ இ ( > ஆய்), ஒஇ ( > ஓய்), போன்ற உயர்திணைப் பெயர்கள் உண்டு. வகர, யகர உடம்படு மெய்கள் சந்தியில் நிலைபெறும் பொழுது

ஆய் ~ ஆ +


44. தொல்காப்பியம், 261

 

“ழகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னான”.

45. யாப்பருங்கல விருத்தி, 53.