87
என நாம் உய்த்துணரலாம்.
இருந்தபொழுதிலும் மேலே காட்டப்பட்டது போன்று சில இடங்களில் முதலசையில் வகர மெய்
வருகையில் அது தொடர்ந்து ஈரிதழ் ஒலியாகவே இருப்பதைக் காணலாம்.
உயிர்த்தொடர் - ‘ஐ’
‘ஐ’ என்பதைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரே அது ‘அ
+ இ’ என்னும் உயிர் மயக்கம் எனக் கொள்ளலாம் எனக் குறிப்பிடுகிறார்.40
இங்கு ஈற்றில் உள்ள இகர உயிர் யகர மெய்யாவதாக அவரே கூறுகிறார்.41
மொழி இறுதியில் இகர உயிர் வேறு சில இடங்களிலும் யகர மெய்க்கு மாற்றொலியாக வருகிறது.42
‘ஆய்’, ‘போய்’ என்பவற்றில் உள்ள யகர மெய்யின் உருபன் நிலையை விளக்க இச்செய்திகள்
முக்கியமானவை. இறந்த காலத்தைக் காட்டும் உருபாக யகர மெய் பயன்படுவது இல்லை.
மொழியிறுதியில் யகர மெய்யும் இகர உயிரும் தம்மிடையே மாறிக்கொள்கின்றன என்பதைத்
தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவதன் மூலம் யகர மெய்யில் இறந்தகாலம் காட்டும் உருபான
இகரத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறார். மேலும் இச்சொற்களில் இருவகையான பழைய உயிர்
மயக்கங்களையும் காண்கிறோம்.
1. ஆஇ (> ஆய்)
2. போஇ (> போய்)
ஆனால் இவை இன்று
இவ்வாறு உச்சரிக்கப்படுவதில்லை.
உயிர்மயக்கங்கள் (Vowel
Clusters)
அளபெடைகள் எனப்படும் உயிர்மயக்கங்களும் உண்டு. இங்கு
நெட்டுயிரானது அதற்கு இனமான குற்றுயிருடன் வருகிறது. அவை வருமாறு : “ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ”.
யாப்பியலின்படி இவை ஈரசைகளை உடையன. சமஸ்கிருதத்தில் உள்ள ப்ளூதாவைப்(Pluta)
போல மூன்று மாத்திரை அளவுடைய தனியொலிகள் தமிழ் மொழியில் இல்லை எனத்
தொல்காப்பியர் கூறுகிறார்.43
40.
தொல்காப்பியம், 54.
41.
தொல்காப்பியம், 56.
42.
தொல்காப்பியம், 58.
43.
தொல்காப்பியம், 5
“மூவளபு இசைத்தல்
ஓரெழுத் தின்றே”.
|
|