தமிழ் மொழி வரலாறு
86
உயிர்த்தொடர் - ஒள
உயிர்த்தொடராகிய “ஒள’ தமிழில் நிலையாக
வேரூன்றவில்லை என்றே கொள்ள வேண்டும். சமஸ்கிருத நெடுங்கணக்கைப் (
Alphabet) பின்பற்றியே இவ்வுயிர்த் தொடர் தமிழுக்கு வந்துள்ளது. தொல்காப்பியர் இதனை “அ + உ”
என்றே விளக்குகிறார்.38
உகர உயிர் மெய்த்தன்மை பெற்று வகர மெய்யாவதை அவர் குறிப்பிடவில்லை. முன்னிலையில்
‘ஒள’ இறுதி அசைநிலையாக வரும் எனக்குறிக்கிறார்.39
தமிழில் இதற்குச் சான்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பழங்கன்னடத்தில் ‘ஒள’ என்பது
பெண்பால் விகுதியாக வருகிறது. ‘அவ்வை’ என்ற சொல்லின் வேரான ‘அவ்’ என்பதோடு ‘ஒள’
என்பது ஒப்பிடத்தக்கது. பிற இடங்களில் ‘அவ்’ என எழுதப்படுவதைத் தொல்காப்பியர் ‘ஒள’
என எழுதுவார்.
சான்றுகள்
அவ்வை
|
~ |
ஒளவை |
தவ்வை |
~ |
தௌவை |
நவ்வி |
~ |
நௌவி |
பவ்வம் |
~ |
பௌவம் |
மவ்வல் |
~ |
மௌவல் |
வவ்வல் |
~ |
வௌவல் |
வகர மெய்யானது
தொல்காப்பியர் காலத்தில் பல்லிதழொலியாக இருந்திருக்க முடியாது என்பதன் அடிப்படையாக
இவ்வாறு அமைந்திருக்கலாம். எல்லா வகர மெய்களும் பல்லிதழ் ஒலியாக இருக்கவேண்டும் என
அவர் கொண்டதால், இந்த ஈரிதழ் வகர மெய்யை அவர் உகரத்துடன் இணைத்துக் காண
விழைகிறார் என்றே கொள்ள வேண்டும். எனவே வகரமெய் முதலில் ஈரிதழ் ஒலியாக இருந்து
பின்னர்ப் பல்லிதழ் ஒலியாக ஆகியிருக்க வேண்டும்
38.
தொல்காப்பியம், 55
“அகரம் உகரம் ஒளகார
மாகும்”.
39.
தொல்காப்பியம், 152
|
“ஒளவென வரூஉம் உயிரிறு
சொல்லும்
ஞ ந ம வ என்னும்
புள்ளி யிறுதியும்
குற்றிய லுகரத்
திறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா
முன்னிலை மொழிக்கே”. |
|
|