தமிழ் மொழி வரலாறு
85
அதாவது எகரமும் அகரமும்
இச்சூழலில் எகரமாக ஒன்றாகின்றன. இவற்றில் அகரம் எகரமாக இடையண்ண ஒலியாக்கப்படுகிறது
எனலாம்.
உ, ஊ, ஒ, ஓ ஆகிய
இதழுயிர்களுடன் வகர மெய் மொழி முதலில் வராது.37
பிற கட்டுப்பாடுகளை அட்டவணையில் காணலாம்.
3. 2 உயிர்கள்
மூலத்திராவிட மொழியிலும் குகைக் கல்வெட்டு மொழியிலும்
உள்ளது போலவே இங்கும் ஐந்து உயிரொலியன்களே உள்ளன. அவற்றின் நீட்சி இங்கும் ஒலியன்
தன்மையதாகவே உள்ளது.
உயிர்கட்கு வேற்றுநிலை
வழக்குகள் வருமாறு :
இரு |
1336 |
னுரு |
260 |
அரு |
1017 |
சூரு |
1017 |
ளுரு |
139 |
இன்று |
1054 |
ஈன்று |
858 |
என |
7 |
ஏன |
66 |
அசை |
1141 |
ஆசை |
1053 |
ஒத்து |
994 |
ஓத்து |
1426 |
உடல் |
1006 |
ஊடல் |
960 |
உயிர்த்தொடர்கள் (
Diphthongs)
தொல்காப்பியர்
காலத்தமிழில் ஐ, ஒள ஆகிய உயிர்த்தொடர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்ததாகக் கருத
வேண்டியுள்ளது.
37.
தொல்காப்பியம், 63
|
“உ ஊ ஒ ஓ என்னும்
நான்குயிர்
வ என் எழுத்தோடு
வருதலில்லை”. |
|
|