பக்கம் எண் :

ரகர
 

தமிழ் மொழி வரலாறு

84

ரகர மெய்யும் ழகர மெய்யும் ஒரு பொழுதும் இரட்டித்து வருவதில்லை. மூக்கொலிகள் தம்மின வெடிப்பொலிகளுடன் வரும் மயக்கங்களுக்கு முன்னர் ய, ர, ழ முதலிய இடையின மெய்கள் வரலாம். இச்சூழலில் தான் தமிழில் மூன்று மெய்கள் சேர்ந்து வரும்.

யகர மெய் ஒலியனா?

தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத் தமிழில் உயிரொலி மயக்கங்கள் மிகுதியாக வழங்கி வந்தன என்பது தெளிவு. தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத்தமிழில் யகர மெய் ஒலியனா என்பதை ஆராயலாம். ஓரசை வேரின் ஈற்றில் உள்ள யகர மெய் இகர உயிரின் மாற்றொலியாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியத்தின்படி யகர மெய் ஆகாரத்துடன் தான் மொழி முதலில் வரும். பர்ரோ குறிப்பிடுவது போல ‘யா’ வை ‘இ + ஆ’ எனப்பிரித்தால், யகர மெய் ஒலியனாக இருக்கத் தேவையில்லை.33 சில சமயங்களில் வேர்கள் ஓரசைக்கு மேற்பட்டவையாயிருக்குமாயின் உயிர்கட்கு நடுவில் வரும் சகர மெய் மறைந்து இகரம் தோன்றுகிறது. இந்த இகரமே பின்னர் யகர மெய்யாகிறது. இங்குச் சகர மெய் இழப்புற்றது எனக் கூறலாம். பசி > பை. சான்று : “பைங்கிளி”34

மொழி முதல் சில உயிர்களுடன் வரும் மெய்கள் மீதான கட்டுப்பாடுகள்

மொழி முதல் வரும் மெய்கள் மீது, அவை இன்ன உயிர்களுடன் தான் வரவேண்டும் எனச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. யகர மெய் ஆகாரத்துடனன்றி மொழி முதலில் வராது.35 ய், ச், ஞ் முதலிய இடையின மெய்கள் மொழி முதலில் அகரத்துடன் வாரா.36


33.Burrow :

BSOAS, Vol. XI, Part 3, pp 565-602.

34. அகநானூறு, 34, 14

“. . . . . . செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி”-

35. தொல்காப்பியம், 65

“ஆவோ டல்லது யகர முதலாது”.

36. தொல்காப்பியம், 62, 64, 65

 

“ஆவோ டல்லது யகர முதலாது”.
“சகர கிளவியும் அவற்றோ ரற்றே
அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே”.
“ஆ எ ஒ
என்னும் மூவுயிர் ஞகாரத் துரிய”.