பக்கம் எண் :

ஒன
 

தமிழ் மொழி வரலாறு

83

ஒன்றாகிவிட்டதே இந்த ஐயப்பாடு எழக் காரணமாகும். எனினும் தொல்காப்பியர் காலத் தமிழில் இவ்வொலி பேணப்பட்டிருந்தது. ‘உரிஞ்’ என்ற ஒரே ஒரு சொல்லில் மட்டுமே அது மொழியிறுதியில் வருகிறது. மொழி இடையில் வருவதும் குறைவே. பிற்காலத்தில் தமிழின் பல வட்டார வழக்குகளில் ஞகர மெய்யும் நகர மெய்யும் ஒன்றாகிவிடுவதை நோக்குகையில், இச்செய்திகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

இடையின மெய்கள்

ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய எஞ்சிய மெய்கள் இடையினம் என வகைப்படுத்தப்படுகின்றன. சிலர் இவற்றை ‘அரை உயிர்கள்’ ( semi vowels)
என்பர்.

இடையின மெய்களுக்கான வேற்றுநிலை வழக்குகள் வருமாறு:

வலி 827
வளி 242
வழி 714
அரி 839
யார் 1575
வார் 1536
 

 

 

 

 

தொல்காப்பியரின் மொழியில் யகர மெய் தனி ஒலியனாயிருந்த போதிலும், தொல்காப்பியருக்கு முற்பட்ட தமிழில் அது அவ்வாறே இருந்ததா என்பது பின்னர் ஆராயப்படும்.


வ்-   - ய்-
-வ்-    -ர்- -ய்-
-வ்வ்-      
-வ்   -ர் -ய்
-வ் ( N > வ்ம் NN)    
-வ் ( N ம்ம்)    
வ் ( P > PP க் P)    

[ N-Nasal (மூக்கின மெய்), P-Plosive (வெடிப்பொலி) ]


பல்லெயிறு சார்ந்த ஒலி நுனியண்ணவொலி
-ல்- -ழ்-
-ல்ல்-  
-ல் -ழ்