பக்கம் எண் :

New Page 5
 

தமிழ் மொழி வரலாறு

82

வேற்று நிலை வழக்கிற்குச் சான்றுகள்

அ. மொழி முதல்

மாலை

796

நால்

1196

ஞாலத்து

1037

ஆ. மொழி இடை தனித்தும் இரட்டித்தும்

தனிச் சொற்களில்
அமை(த்தல்)

1258

அம்மை

1491

னுன

7

என்ன

556

பணை

822

பண்ணை

802

தொகைச் சொற்களில்

முந்நாள்

1068

முந்நீர்

980

பொருநர்

1037

உழிஞை

1010

ஐஞ்ஞூறு

1358

   


இ. மொழி இறுதி

மரம்

304

வெரிந்

300

வரின்

101

முரண்

390

உரிஞ்

80

(நச்சினார்க்கினியர் உரை)

மொழி இடையில் வரும் ந், ஞ் ஆகியவற்றுக்கு வேற்றுநிலை வழக்குகள் கிடைக்கவில்லை. என்றாலும் தொகைச் சொற்களில் மொழி இடையில் வரும் மூக்கொலி இரட்டைகளுக்குத் தனிச் சொற்களில் வரும் தனித்த மூக்கொலிகளுடன் வேற்றுநிலை வழக்குகள் கிடைக்கின்றன.

நுனிநா பல் மூக்கொலி மொழி இறுதியில் வருவது இரண்டு சொற்களோடு நின்றுவிடுகிறது. ‘வெரிந்’, ‘பெருந்’ என்பன அச்சொற்களாகும். நுனிநா பல் நகர மெய்யும் நுனியண்ண னகர மெய்யும் பிற்காலத்தில் ஒன்றாகிவிடும் வளர்ச்சியை நோக்குகையில், இச்சொற்களின் முக்கியத்துவம் புலப்படும். மூலத்திராவிட மொழியில் இடையண்ண ஞகர மெய் மொழி முதலில் வருமா என்ற ஐயப்பாடு இருந்தது. நுனிநா பல் அல்லது நுனியண்ண மூக்கொலியோடு இவ்வொலி பல வட்டார வழக்குகளில்