தமிழ் மொழி வரலாறு 81
ப் |
த் |
ற் |
ட் |
ச் |
க் |
ப்- |
த்- |
|
|
ச்- |
க்- |
-ப்- |
-த்- |
-ற்- |
-ட்- |
-ச்- |
-க்- |
-ப்ப்- |
-த்த்- |
-ற்ற்- |
-ட்ட்- |
-ச்ச்- |
-க்க்- |
-ம்ப்- |
-ந்த்- |
-ன்ற்- |
-ண்ட்- |
-ஞ்ச்- |
-ம்க்>[ங்க்] |
-பு |
-து |
-று |
-டு |
-சு |
-கு |
தகர மெய்யும் டகர மெய்யும்
நுனியண்ண ஒலிகள் என நம்புதற்குரிய காரணங்களை கண்டோமெனினும், மூலத் திராவிட மொழியின்
வளர்ச்சியை ஆராயும் பொழுது மரபுக்காக அவற்றைத் தொடர்ந்து முறையே நுனியண்ண ஒலி, நாவளை
ஒலி, என்றே அழைத்து வருவோம். மூலத்திராவிட மொழியில் மொழி இறுதியில் வந்த
வெடிப்பொலிகள் இங்கு உகரத்துடனேயே வருகின்றன.
மூக்கொலியன்கள்
ஆறு மூக்கொலியன்கள்
உள்ளன :
ம், ந், ன், ண், ஞ்,
ங்.
ஆறு மூக்கொலியன்களில்
ஐந்தனுக்கே வேற்றுநிலை வழக்குகள் உள்ளன. ‘அங்ஙனம்’ என்னும் சொல், சிலவிடங்களில் ஒரே
மாதிரியாக “அங்ஙனம்” என அச்சிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் நூலை எடுத்தெழுதுவோர் செய்த
தவறாகவே இதைக் கருதவேண்டும். கடையண்ண மூக்கொலியின் வருமுறை பற்றிய நூற்பா ஒன்று காணாமற்
போய்விட்டது எனத் தோன்றுகிறது. இன்றுள்ள நிலையில் ஙகர மெய்யைத் தனி ஒலியனாகக்
கொள்ளமுடியாது. கடையண்ண வெடிப்பொலிக்கு முன்னர் வரும் மகர மெய்யின் மாற்றொலி என்றே
இதைக் கொள்ளவேண்டும்.
மூக்கொலிகளின் வருமுறை
வருமாறு :
ம் |
ந் |
|
|
ஞ்- |
-ம்- |
-ந்- |
-ன்- |
-ண்- |
-ஞ்- |
-ம்ம்- |
-ந்ந்- |
-ன்ன்- |
-ண்ண்- |
-ஞ்ஞ்- |
-ம்ப்- |
-ம்ந்- |
-ன்ற்- |
-ண்ட்- |
-ஞ்ச்- |
-ம்- |
-ந்- |
-ன் |
-ண் |
-ஞ் |
|